தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக நயன்தாரா நடிப்பில் தயாராகியுள்ள புதிய படமான கனக்ட் படத்திற்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.
முன்னணி நடிகையான நயன்தாரா தொடர்ந்து நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைக்களமாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்த கோலமாவு கோகிலா, மாயா, கொலையுதிர் காலம், ஐரா, ஒ2 உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் திகில் படமாக வெளியான மாயா திரைப்படம் வித்தியாசமாக இருந்ததாக பலரின் பாராட்டுக்களை பெற்றது.
இதனிடையே மாயா படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் கனக்ட். லாக்டவுடன் காலத்தில் நடப்பது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நயன்தாராவுடன், வினய், சத்யராஜ், ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். திகில் படமாக தயாராகியுள்ள இந்த படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார்.
99 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்ட இந்த படம் இடைவேளை இல்லாமல் ஓடுவது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். வித்தியாசமாக தயாராகியுள்ள இந்த படத்திற்கு அதுவே பெரிய சவாலாக அமைந்துள்ளது. இடைவேளையுடன் வெளியாகும் படங்களை பார்க்க வரும் ரசிகர்கள் இடைவேளை நேரத்திலி் வெளியில் சென்று ஸ்னாக்ஸ் மற்றும் கூல்ட்ரிங்ஸ் வாங்குவது வழக்கம்.
ஆனால் கனக்ட் படத்தில் இடைவேளை இல்லை என்பதால், கனக்ட் படத்தை வெளியிட தியேட்டர் உரிமையாயளர்கள் மறுப்பு தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கனக்ட் படத்திற்கு இடைவேளை இல்லை என்று படக்குழுவினரே அறிவித்துவிட்டார்கள். தியேட்டர் அதிர்பர்களும் இது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. இடைவேளை இல்லாத படத்தை எங்களால் திரையிட முடியாது என்று திரையரங்கு உரிமையாளர் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வரும் நயன்தாரா படத்தை திரையிட தியேட்டர் உரிமையாளர்களே மறுப்பு தெரிவித்து வரும் இந்நிகழ்வு தற்போது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“