நவ. 10-ல் தியேட்டர்கள் திறப்பு: ரிலீஸ் படங்கள் எவை?

தமிழகத்தில் நவம்பர் 10ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அரசு தமிழக உத்தரவிட்டது. 7 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்படுவதால் முதலில் என்னென்ன படங்கள் தியேட்டருக்கு வருகின்றன என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

By: Updated: November 2, 2020, 09:53:13 PM

நாடு முழுவதும் அக்டோபர் 15ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, தமிழகத்தில் நவம்பர் 10ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அரசு தமிழக உத்தரவிட்டது. 7 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்படுவதால் முதலில் என்னென்ன படங்கள் தியேட்டருக்கு வருகின்றன என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் பரவத் தொடங்கியதையடுத்து, மார்ச் 25ம் தேதி முதல் கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், பொது போக்குவரத்து என அனைத்து முடக்கப்பட்டது. இதையடுத்து, மத்திய, மாநில அரசுகள் படிப்படியாக தளர்வுகளை அறிவித்தது. அதன்படி, மத்திய அரசு, அக்டோபர் 15ம் தேதி முதல் திரையரங்குகளை திறப்பதற்கு அனுமதி அளித்து நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.

ஆனால், தமிழக அரசு ஆலோசனைக்குப் பிறகு, தமிழகத்தில் நவம்பர் 10ம் தேதி முதல் திரையரங்குகளைத் திறப்பதற்கு உத்தரவிட்டாது. பொது முடக்கம் அறிவிக்கப்பட்டபோது மூடப்பட்ட திரையரங்குகள் 7 மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் திறக்கப்படுவதால் முதலில் திரையரங்குகளுக்கு என்னென்ன படங்கள் வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திரைப்படங்களை திரையரங்குகளுக்கு சென்று பார்ப்பதை வழக்கமாகக்கொண்ட சினிமா ரசிகர்களுக்கு தமிழக அரசின் இந்த அறிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையரங்குகளை திறப்பது என்ற தமிழக அரசின் அறிவிப்பு சினிமா ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் என பலருக்கும் ஒரு நிம்மதியை அளித்துள்ளது.

அதே நேரத்தில் திரையரங்குகள் திறக்கப்படும்போது எவ்வாறு வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படும் என்பது போன்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் என்.வெங்கடேஷ், ஊடகங்களிடம் கூறுகையில், “தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நிலையான வழிகாட்டுதல்கலை பின்பற்றும் என்று கூறினார். மேலும், திரையரங்கில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். வழக்கமான ஹேண்ட் சானிடைசர், பணமில்லா பரிவர்த்தனைகள் போன்ற விதிமுறைகளை கடைபிடிப்போம்” என்று கூறினார்.

தமிழகத்தில் நவம்பர் 10ம் தேதி திரையரங்குகள் திறக்கப்படுவது மட்டுமல்லாமல், நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகைக் காலமாக இருப்பதால் திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், சினிமா ரசிகர்களுக்கு இது ஒரு கொண்டாட்டமான காலம் ஆகும்.

தீபாவளி பண்டிகை காலத்தில், வழக்கமாக குறைந்தபட்சம் இரண்டு பெரிய நட்சத்திரங்களின் படங்கள் பாக்ஸ் ஆஃபிஸ் வசுலில் போட்டியில் இருக்கும். கடந்த ஆண்டு, விஜய்யின் பிகில் மற்றும் கார்த்தியின் கைதி ஆகிய இரண்டு படங்களும் வெளியாகி வசூலைக் குவித்தன. ஆனால், பொது முடக்கத்திற்கு பிறகு தியேட்டர்கள் திறக்கப்படுவதால் இந்த தீபாவளிப் பண்டிகைக்கு பெரிய நட்சத்திரங்களின் படங்கள் எதுவும் வெளியாகாது என்று தெரிகிறது.

ஜீவா, அருள்நிதி நடித்துள்ள களத்தில் சந்திப்போம், நகைச்சுவை படமான பன்றிக்கு நன்றி சொல்லி இயக்குனர் சந்தோஷின் இருட்டு அறையில் முரட்டு குத்து 2, சந்தானத்தின் டிக்கிலோனா போன்ற படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்த படங்கள் வெளியாவது குறித்து இன்னும் உறுதிப்படுத்தல் இல்லை. தயாரிப்பு நிறுவனங்கள் இந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள் என்று கூறுகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Tamil nadu theatres reopen on november 10th what movies expected to play in theatres

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X