Advertisment
Presenting Partner
Desktop GIF

பால்- தயிர் திருட்டு: அஜித் ரசிகர்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்த வினியோகஸ்தர்; நஷ்ட ஈடு வழங்க உறுதி

Tamilnadu News Update : எச்சரக்கையும் மீறி வலிமை படம் வெளியான பிப்ரவரி 24-அன்று அதிகாலையில், அஜித் ரசிகர்கள் பால் வண்டியில் இருந்து பால் பாக்கெட்டுகளை திருடும் சம்பவம் அரங்கேறியது.

author-image
WebDesk
New Update
பால்- தயிர் திருட்டு: அஜித் ரசிகர்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்த வினியோகஸ்தர்; நஷ்ட ஈடு வழங்க உறுதி

Tamil Cinema Valimai Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் கடந்த 24-ந் தேதி வெளியான படம் வலிமை. நேர் கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கிய இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்திருந்தார். நாயகியாக ஹூமா குரோஷி,வில்லனாக கார்த்திகேயா ஆகியோர் நடித்திருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

இந்த படம் வெளியாகவதற்கு முன்தினம் அஜித் ரசிகர்கள் இந்நாளை திருவிழா போல் கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தில் அஜித் கட்டவுட்டிற்கு பாலபிஷேகம் செய்ய பால் திருடப்படலாம். பால் முகவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் நிறுவன தலைவர் பொன்னுசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ஆனால் இந்த எச்சரக்கையும் மீறி வலிமை படம் வெளியான பிப்ரவரி 24-அன்று அதிகாலையில், அஜித் ரசிகர்கள் பால் வண்டியில் இருந்து பால் பாக்கெட்டுகளை திருடும் சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பான வீடியோ கட்சி ட்விட்டர் பக்கத்தில் வைரலாக பரவியது. இதை பார்த்த பலரும் அஜித் ரசிகர்கள் சொன்னதை செய்துவிட்டார்கள் என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்நிலையில், வலிமை படத்தின் வெளியிட்டின்போது பால் திருடிய அஜித் ரசிகர்களின் செயலுக்கு வலிமை விநியோகஸ்தர் ஒருவர் வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிடப்பட்ட அறிக்கையில்.

முன்னணி நடிகரான திரு. அஜித்குமார் அவர்களின் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி வெளியான வலிமை பட வெளியீட்டு சமயத்தில் கோயம்பேடு ராகினி திரையரங்க வளாகத்தின் முன்பாக பால் விநியோக வாகனம் சென்ற போது அங்கு குழுமியிருந்த ரசிகர்களில் சிலர் அந்த பால் வாகனத்தில் ஏறி பால் மற்றும் தயிர் பாக்கெட்டுகளை திருடி அஜீத் கட்அவுட்டுகளுக்கு அபிஷேகம் செய்தனர்.

விரும்பத்தகாத இந்நிகழ்வு தொடர்பாக காணொளிகள் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வெளியான நிலையில் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் அஜீத் ரசிகர்களின் செயலுக்கு கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, சம்பந்தப்பட்ட ரசிகர்களை கைது செய்ய வேண்டும், ரசிகர்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பை நடிகர் திரு. அஜித்குமார் அவர்கள் தட்டிக் கழிக்க கூடாது எனவும் கோரிக்கை முன் வைத்தோம்.

இந்நிலையில் அப்படத்தின் தமிழ்நாடு விநியோகஸ்தரும், வலிமை படத் தயாரிப்பாளர் திரு. போனிகபூர் அவர்களின் பிசினஸ் ஹெட்டுமான திரு. ராகுல் அவர்கள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (27.02.2022) என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பட வெளியீட்டு சமயத்தில் நடைபெற்ற ரசிகர்கள் செய்த விரும்பத்தகாத அந்நிகழ்விற்காக வருந்துவதாக கூறி வருத்தம் தெரிவித்ததோடு, அன்றைய தினம் கோயம்பேடு ராகினி திரையரங்க வளாகத்தின் வழியாக சென்ற பால் விநியோக வாகனத்தில் இருந்து ரசிகர்களால் திருடப்பட்ட பால் மற்றும் தயிருக்கான தொகையை செலுத்துவதாக தெரிவித்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Valimai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment