இந்தியில் இருந்து ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுளள் லாப்பட்டா லேடீஸ் திரைப்படத்தை போலவே தமிழில் தற்போது புதிய சீரியல் ஒன்று உருவாகியுள்ளது. இந்த சீரியலின் ப்ரமோ இணையத்தில் வரலாகி வருகிறது.
Advertisment
தமிழ் சின்னத்திரையில், முன்னணி சேனல்களுக்கு இணையாக இவ்வப்போது புதிய சீரியலை களமிறக்கி வருகிறது ஜீ தமிழ் சேனல். அதிலும் குறிப்பாக விஜய் மற்றும் சன் டிவியை போல் வெற்றி பெற்ற படங்களில் பெயர்களை பயன்படுத்துவதை தொடர்ந்து வரும் இந்த சேனலில் தற்போது புதிய சீரியல் ஒன்று விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலின் பெயர் மௌனம் பேசியதே. நடிகர் அசோக் இந்த சீரியலில் நாயகனாக நடிக்க, ஜோவிதா லிவிங்ஸ்டன் நாயகியாக நடித்துள்ளார்.
தமிழில், கோழி கூவுது, பிடிச்சிருக்கு, முருகா உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் அசோக். கடைசியாக தமிழில் மாய புத்தகம் படததில் நடித்திருந்தார். அதேபோல், சன்டிவியின் பூவே உனக்காக சீரியலில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமாக ஜோவிதா லிவிங்ஸ்டன், அதன்பிறகு சன்டிவியின் அருவி சீரியலில் நடித்திருந்த நிலையில், தற்போது ஜீ தமிழ் சீரியலில் என்ட்ரி ஆக உள்ளார். அதேபோல், மற்றொரு ஜோடி இந்த சீரியலில் இருக்கிறது.
இரு ஜோடிகளுக்கு ஒரே கோவிலில் திருமணம் நடக்கிறது. ஒன்று விருப்பபட்ட திருமணம். மற்றொன்று விருப்பம் இல்லாமல் பெற்றோர் சம்மதத்துடன் நடக்கும் திருமணம். இந்த இரு திருமணங்களும் நடந்து முடிந்து இரு ஜோடிகளும் ஒரு பேருந்தில் பயணம் செய்ய, அந்த பேருந்து விபத்தில் சிக்குகிறது. இந்த விபத்தில் சிக்கிய இரு தம்பதிகளும் ஜோடி மாறிவிடுகின்றனர். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பது தான் இந்த சீரியலின் கதை என்று தற்போது வெளியாகியுளள் இந்த சீரியலின் ப்ரமோவில் காட்டப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
இந்த ப்ரமோ சீரியல் குறித்து எதிர்பார்ப்பை அதிகரித்தாலும், இந்த சீரியல் இந்தியில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்று ஆஸ்கார் விருதுக்கு இந்திய திரைத்துறையினரால் பரிந்துரை செய்யப்பட்ட 'லாப்பட்டா லேடீஸ்' என்ற படத்தின் கதை போன்று உள்ளது. அந்த படத்தில் திருமணமான இரு ஜோடிகள் ஒரே ரயிலில் பயணிக்கும்போது, ஜோடிகள் மாறிவிடும். அந்த மணப்பெண்கள் தங்கள் கணவருடன் இணைந்தார்களா என்பதை பெண்களுக்கான முன்னேற்றத்தையும் சுய உரிமையையும் அடிப்படையாக வைத்து திரைப்பதை அமைத்திருப்பார்கள்.
இந்த படம் இந்திய உச்சநீதிமன்றத்தில் திரையிடப்பட்டு நீதிபதிகளின் பாராட்டுக்களை பெற்றிருந்த நிலையில், தற்போது இந்த படத்தை காப்பியடிக்கும் விதமாக 'மௌனம் பேசியதே' சீரியலின் ப்ரமோ அமைந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“