scorecardresearch

சின்னத்திரையில் அறிமுகமாகும் பிரபல நடிகர் : சன் டி.வி சீரியலின் புதிய அப்டேட்

சமீபத்தில் திடீரென முடிவுக்கு வந்த பூவே உனக்காக சீரியலுக்கு பதிலாக செவ்வந்தி என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.

சின்னத்திரையில் அறிமுகமாகும் பிரபல நடிகர் : சன் டி.வி சீரியலின் புதிய அப்டேட்

ஒளிப்பதிவாளர் நடிகர் என இயங்கி வந்த இளவசரசு தற்போது செவ்வந்தி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் சீரிய்ல்கள் ஒளிபரப்புவதில் சன் டி.வி.க்கு முக்கிய இடம் உண்டு. ஒரு சீரியல் முடிவடையும்போது அடுத்த சில நாட்களில் புதிய சீரியலை தொடங்குவது சன் டி.வி.யின் வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் திடீரென முடிவுக்கு வந்த பூவே உனக்காக சீரியலுக்கு பதிலாக செவ்வந்தி என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.

வரும் ஜூலை 4-ந் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ள இந்த சீரியலில் 90-கிட்ஸ்களில் முக்கிய நடிராக இருந்த ராகவ் மீண்டும் சன்.டி.வி சீரியலில் என்ட்ரி கொடுக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியல் குறித் எதிர்பார்ப்பை ஏற்படுத்த இதில் நடிக்கும் நட்சத்திரங்களின் பட்டியலை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி ஒளிப்பதிவாளர் நடிகரான இளவரசு மற்றும் நடிகை வினோதனி இந்த சீரியலின் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 1994-ம் ஆண்டு வெளியான கருத்தம்மா படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமான இளவரசு தொடர்ந்து பாஞ்சாலங்குறிச்சி. நினைத்தேன் வந்தாய். ஏழையின் சிரிப்பில் உள்ளிட்ட சில படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

தொடர்ந்து முதல் மரியாதை படத்தில் சிறிய வேடத்தில் நடித்து நடிகராக அறிமுகமான இவர், தொடர்ந்து பல படங்களில் நடித்தள்ளார். இதில் முத்துக்கு முத்தாக மாயாண்டி குடும்பத்தார். களவாணி, நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். காமெடி குணச்சித்திரம் வில்லன் உள்ளிட்ட பல ரோல்களில் நடித்து முத்திரை பதித்துள்ளார்.

மறுப்புறம், நடிகை வினோதினி ஓகே கண்மணி, அப்பா, ஆண்டவன் கட்டளை, ராட்சசன், கோமாளி, கேம் ஓவர், பொன்மகள் வந்தாள், மற்றும் சூரரைப் போற்று உள்ளிட்ட பல படங்களிலல் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இவர்களின் வருகை செவ்வந்தி சீரியல் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

அதேபோல் மற்ற கலர்ஸ் தமிழில் மாரி. ஜீ தமிழில் அமுதாவும் அன்னலட்சுமியும், கலைஞர் டிவியில் பொன்னி சி/ஒ ராணி மற்றும் கண்ணெதிரே தோன்றினால் உளளிட்ட சீரியல்கள் புதிதாக ஒளிபரப்பாக உள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil new serial sevvanthi actor ilavarasu entry in tv serial