சன் டி.வி.யில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள செவ்வந்தி சீரியலின் ப்ரமோ தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழில் சீரியல்கள் ஒளிபரப்புவதில் முன்னணியில் உள்ள சன். டி.வி.யின் பூவே உனக்காக சீரியல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென முடிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் தமிழ் சீரியல் வட்டாரத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ஆனால் எந்த சேனலாக இருந்தாலும் ஒரு சீரியல் முடிந்துவிட்டால் அடுத்து சில நாட்களில் புதிய சீரியல் களமிறங்கும என்பது எழுதப்படாத விதி. அதற்கேற்ப பூவே உனக்காக சீரியல் இடத்தை நிறப்பு புதிய கொண்டுவரப்பட்டுள்ளது செவ்வந்தி சீரியல்.
பெரிய இடைவெளிக்கு பிறகு பிரபல நடிகர் ராகவ் ரங்கநாதன் இந்த சீரியல்ல முக்கிய கேரக்ரில் நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக திவ்யா ஸ்ரீதர் நடிக்க உள்ளார். பெரிய இடைவெளிக்கு பிறகு ராகவ் சீரியல்ல எண்ட்ரி ஆகியுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மகராசி சீரியலுக்கு பின் திவ்யா ஸ்ரீதர் இந்த சீரியலில் நடித்து வருகிறார். தற்போது இந்த சீரியலின் ப்ரமோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் தங்களது ஆசைகளை சொல்ல நாயகி செவ்வந்தி மட்டும் தனது கணவரின் ஆசைதான் தன ஆசை என்று சொல்கிறார்.
குடும்ப உறவுகளை மையப்படுத்திய இந்த சீரியல் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,இந்த ப்ரமோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“