Vijay TV New Serial Thamizhum Saraswathiyum : தற்போதைய காலகட்டத்தில் திரைப்படங்களை விட சீரியலுக்கே ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக உள்ளது. அதற்கு ஏற்றார்போல் தொலைக்காட்சிகளும் ரசிகர்களின் ரசனைக்கேற்ப நாள்தோறும் புதிய சீரியல்களை களமிறங்கி வருகின்றனர். இதில் பல சீரியல்கள் தமிழல் ஹிட்டான படங்களின் தலைப்பை பயன்படுத்தி வருகின்றன. அதிலும் ரசிகர்களின் ரசனையை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றாற்போல் சீரியல் ஒளிபரப்புவதில் விஜய்டிவிக்கு தனி இடம் உண்டு.
அந்த வகையில் விஜய் டிவி தற்போது "தமிழும் சரஸ்வதியும்" என்ற புதிய சீரியலை ஒளிபரப்ப தயாராகி வரகிறது. இந்த புதிய சீரியலில் ஹீரோவாக நடிகர் தீபக் தினகர், ஹீரோயினாக நக்ஷத்திரா நாகேஷ் ஆகியோர் நடிக்க உள்ளனர். சமீபத்தில் வெளியான இந்த சீரியலின் ப்ரமோ வீடியோவை விஜய் டிவி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தது.
ஏற்கனவே சன் டிவி-யில் ஒளிபரப்பான தென்றல் சீரியலில் தமிழ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய முன்னணி தமிழ் தொலைக்காட்சி நடிகரான தீபக் தினகர் காதல் வைரஸ், இளசு புதுசு ரவுசு, இவனுக்கு தண்ணில கண்டம் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதில் இவனுக்கு தண்ணில கண்டம் என்ற படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
பிரபல சின்னத்திரை நடிகை நக்ஷத்ரா நாகேஷ் , சன்டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். மேலும் சன்டிவியில் தொகுப்பாளினியாக இருக்கும் இவர், குறும்படம், மியூசிக் ஆல்பம் சிலவற்றில் நடித்துள்ளார். கடைசியாக சன்டிவியில் நாயகி சீரியலில் நடித்திருந்தார். தற்போது சிறிய இடைவெளிக்கு பிறகு விஜய்டிவியின் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடிக்க உள்ளார்.
இந்த சீரியல் குறித்து விஜய் டிவி வெளியிட்டுள்ள ப்ரமோ வீடியோவில், முதல் சீனிலேயே கோவிலுக்கு சென்று பிள்ளையாரிடம் இந்த முறையாவது நான் 12-வது பாஸ் செய்து அப்பா மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்று சரஸ்வதி (நக்ஷத்திரா) வேண்டி கொள்கிறார். பின்னர் கோவில் குருக்கள் பிரசாதம் கொடுக்கும் போது என்ன சரஸ்வதி, 12-வதே எட்டாவது அட்டம்ப்ட்டா.? கஜினி முகமதுவையே மிஞ்சிடுவ போல இருக்கே என்று கலாய்கிறார். தொடர்ந்து படிப்பு மட்டும் வாழ்க்கை இல்லை என்று சிரித்து கொண்டே செல்கிறார். அப்போது சரஸ்வதி சிலை முன் நின்று, படிப்பால் தனது வாழ்க்கையே போய் விட்டதாகவும், ஒரு பெண் படிப்பில்லை என்று சொல்லி தன்னை ரிஜெக்ட் செய்து விட்டதாக தீபக். புலம்பி கொண்டிருக்கிறார்.
இதை பார்க்கும் நக்ஷத்திரா கடவுள் சரஸ்வதி பேசுவது போல பேசி, பக்தா உன் ஆசைகள் கண்டிப்பாக நிறைவேறி உன் அம்மா மனதும் குளிரும். நன்கு படித்த ஒரு அழகான பெண் அவரை தேடி வர போவதாகவும் கார்மேகங்கள் சூழ, விண்ணதிரும் இடி சத்தத்தோடு, சோவென்று ,மழை பெய்யும் போது அந்த பெண்ணை நீ பார்ப்பாய் என்றும் கூறுகிறார். அதன்பிறகுமழையில் டான்ஸ் ஆடி கொண்டிருக்கும் போது தீபக், நக்ஷத்திராவை பார்க்க ப்ரமோ முடிவடைகிறது. இந்த ப்ரமோ பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், சீரியல் எபிசோடுகளுக்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil