கீழே தள்ளிய மாஸ்டர்; குக் வித் கோமாளி லிஸ்டிலேயே இல்லையாமே..! விஜய் டிவி ஷாக்

cook with comali updates: விஜய் டிவியின் பிரம்மாண்டமான ஹிட் ஷோவான குக் வித் கோமாளி டிஆர்பி லிஸ்டிலேயே இல்லை

ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு வாரத்தின் டிவி டி ஆர் பி ரேட்டிங் வெளியாகியுள்ளது. மாஸ்டர் படம் முதன் முதலில் சன் டிவியில் வெளியானதால் சன் டிவியின் டி.ஆர்.பி எகிறியுள்ளது

சின்னத்திரையில் சீரியல்கள் ரியாலிட்டி ஷோக்கள் என வெரைட்டியான நிகழ்ச்சிகளை கொடுத்து டிஆர்பி ரேசில் முந்த முன்னணி தொலைகாட்சிகள் போட்டியிடும், அதிலும் குறிப்பாக சன் டிவி, விஜய் டிவிக்கு இடையே தான் எப்போதும் போட்டி இருக்கும்

இந்த நிலையில் கடந்த தமிழ் புத்தாண்டு வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் வெளியிடப்பட்டுள்ளது, அதிலும் எதிர்பார்த்தபடி சன் டிவியில் வெளியான தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் டிஆர்பியில் டாப் ரேங்கில் உள்ளது.அதே போல் இரண்டாம் இடத்தில் சிங்கம்-3 படமும் மூன்றாம் இடத்தில் ரோஜா சீரியலும் இடம்பிடித்துள்ளது. முதல் மூன்று இடங்களில் சன் டிவி மாஸ் காட்ட, நான்காம் இடத்தில் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா இடம்பெற்றுள்ளது.சில வாரங்கள் முன்பு வரை டாப் டிஆர்பியில் இருந்த இந்த சீரியலை கடந்த வாரம் ரோஜா சீரியல் கீழே தள்ளியது.

இதை விட பெரிய ஷாக் என்வென்றால் விஜய் டிவியின் பிரம்மாண்டமான ஹிட் ஷோவான குக் வித் கோமாளி டிஆர்பி லிஸ்டிலேயே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சன் டிவி தான் தற்போது டிஆர்பி அடிப்படையில் நம்பர் ஒன் சேனல் விஜய் டிவி இரண்டாவது இடத்திலும், ஜீ தமிழ் மூன்றாம் இடமும் பிடித்துள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil new year week master in suntv top trp rating cook with comali out of list

Next Story
இன்பநிதி இவ்ளோ வளர்ந்துட்டாரா..! ஹாயாக தோளில் கை போட்ட உதயநிதி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com