தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. தமிழக அரசியலில் இரு பெரும் சக்தியான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இல்லாமல் தமிழகம் சந்தித்த இந்த முதல் தேர்தலில் திமுக வெற்றிவானை சூடியுள்ளது. இதன் மூலம் 6-வது முறையாக ஆட்சியை பிடித்துள்ள திமுகவில் முக.ஸ்டாலின் முதல்வர் அரியணையில் அமர உள்ளார்.
இந்நிலையில், முதன் முறையாக முதலமைச்சராக பதவி ஏற்கவுள்ள ஸ்டாலினுக்கு, தேசிய தலைவர்கள் முதல் எதிர்கட்சி தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், மேயாத மான் படத்தின் நாயகியாக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ள நடிகை பவானி சங்கர், ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் தனது வாழத்து செய்தியில், அதில், நீண்ட காலத்துக்கு பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின். அவர் தலைமையில் தமிழ்நாடு. பேரிடரிடையே பதவி ஏற்றாலும் இங்கிருந்து சிறப்பாக வழிநடத்துவீர்கள் சாமானியர்கள் முன் எப்போதையும் விட பல மடங்கு நம்பிக்கையுடன் உங்களை பார்த்துக்கொண்டிருக்குறோம்.வாழ்த்துகள்” என்று பதிவிட்டு இருந்தார். தற்போது இவரின் பதிவு நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இவர் முன்பு வெளியிட்ட ட்விட்டர் பதிவுகளை மேற்கோளிட்டு கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அந்த விமர்சனங்களுக்கு பிரியாவும் பதிலடி கொடுத்து வருகிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil