VJ Archana Sudden In Hospital For Brain Surgery : கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற நடிகை அர்ச்சனா தற்போது திடீரென மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு முளையில் அறுவை சிகிச்சை செய்துள்ளதாக கூறியுள்ளார்.
சன்டிவியில் கடந்த 2000-ம் ஆண்டு தொடங்கப்பட்ட காமெடி டைம் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமானவர் அர்ச்சனா. தொடர்ந்து ஜீ தமிழ், கலைஞர் ஆகிய தொலைக்கட்சிகளில் தொகுப்பாளராக இருந்த அவர், கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழச்சியில் பங்கேற்றார். இந்ந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் பெரும் பிரபலமானார். மேலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள டாக்டர் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து வரும் அர்ச்சனா தற்போது ஒரு எஃப்எம் நேரலையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக களமிறங்கினார். இந்நிலையில், தற்போது தனது சமூகவலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ள அர்ச்சனா தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், தனக்கு மூளையில் ஆப்ரேஷன் நடைபெற போவதாகவும் கூறியுளளார்.
அவரது மூளையில் செரிப்ரோஸ்பைனல் திரவ கசிவு (Cerebrospinal fluid leak) இருப்பதால், அதற்காக மறு சீரமைக்கும் (re-construction) ஆப்ரேஷன் இன்று காலை 7 மணி முதல் 11 மணி வரை நடைபெற உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் ஒரு வாரம் அவர் மருத்துவமனையில் தான் இருக்கவேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்து அறிவுறுத்தியுள்ளதாக வும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் தனது பதிவில்,
அன்பான இன்ஸ்டா மற்றும் எஃப் பி குடும்பம், நீங்கள் எல்லோரும் நன்றாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன் .
நான் எப்போதும் என் இதயத்திலிருந்து செயல்படும் ஒரு நபர்! எனவே, என் மூளை கவலையடைந்து, என் இதயத்தை விட சக்தி வாய்ந்தது என்பதைக் காட்ட விரும்பியது போல் தெரிகிறது !! இப்போது என் மூளை ஒரு சிறிய சிக்கலை உருவாக்கத் தொடங்கியுள்ளது . அது என் மண்டை ஓட்டின் பின் ஒரு சிறிய துளை உள்ளது, அதை சரி செய்ய ஒரு சிறிய சிகிச்சை தேவை .
நான் இன்று ஒரு செரிப்ரோஸ்பைனல் திரவ கசிவு (பொதுவாக சி.எஸ்.எஃப் கசிவு என அழைக்கப்படுகிறது) காரணமாக மறு சீரமைப்பு அறுவை சிகிச்சைக்கு செல்கிறேன்… மூளைக்கு அருகிலுள்ள மண்டை ஓட்டில் சில விசித்திரமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. எம்.ஆர்.ஐ ஸ்கேன் இதை உறுதி செய்துள்ளது! நான் காலை 7 மணி முதல் காலை 11 மணி வரை சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறேன், இதனால் நான் மீண்டும் வீட்டிற்கு வருவதற்கு ஒரு வாரம் ஆகும்
இந்த எதிர்பாராத குழப்பத்தின் மத்தியில் நாங்கள் இருப்பதால், எங்களால் போன் அழைப்புகளை எடுக்க முடியாமல் போகலாம், ஆனால் எனது வாழ்வில இந்த கட்டத்தையும் எதிர்த்துப் போராடி வீட்டிற்கு வருவேன் என்று நான் உறுதியளிக்கிறேன், இதயமும் மகிழ்ச்சியும் என பதிவிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil