Cook With Comali Pughal Tamil News : மக்கள் மத்தியில் ரியாலிட் ஷோக்களுக்கு தனி இடம்பிடித்துள்ள விஜய் தொலைக்காட்சியில், நாள்தோறும் புதிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. இவை அனைத்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுவரும் நிலையில், பழைய ரியாலிட்டி ஷோக்களுக்கும் மக்கள் தனி இடம் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2019-ம் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதில் முதல் சீசன் முடிந்து கடந்த ஆண்டு இறுதியில் 2-வது சீசன் நடைபெற்றது.
முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை விட 2-வது சீசன் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் 14 ஆண்டு முடிவுக்கு வந்தது. ஆனாலும் ரசிகர்கள் இந்நிகழ்ச்சி பற்றி தற்போதுவரை சமூகவலைதளங்களில் உரையாடி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கோமாளிகள். சூப்பர் சிங்கரில் அசத்திய சிவாங்கி, புகழ், பாலா, மதுரை முத்து, மனிமேகலை என அனைவரும் நகைச்சுவையில் மக்களை கவர்ந்து இழுத்தார்கள் எனறே சொல்லவாம். இதில் சிவாங்கி மற்றும் புகழ் இருவரும் செய்த அட்ராசிட்டிகள் மக்கள் மத்தியில் அதிகம் ரசிக்கப்பட்ட காட்சிகளாக உள்ளது.
இந்நிகழ்ச்சியின் மூலம் பலர் புகழ்பெற்றள்ள நிலையில், சிவாங்கி புகழ் அஸ்வின் என சிலர் பட வாய்ப்பு பெற்று நடித்து வருகினறனர். அந்த வகையில் தற்போது தமிழ்சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் நடிகர் புகழ், அவ்வப்போது வெளியூர்களில் நடைபெறும் கடை திறப்பு விழாவில் பங்கேற்று வருகிறார். இவர் வருவது தெரிந்தாலே ரசிகர்கள் பட்டாளம் குவிந்துவிடம் அளவிற்கு மக்கள் மத்தியில் பேர் வாங்கியுள்ள புகழ், சமூக வலைதளங்களில் அதிகம் தேடப்படும் ஒரு நபராக உள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா தாக்கம் குறைந்துள்ள நிலையில், மக்கள் கட்டுப்பாடகளில் இருந்து இயல்பு வாழ்கைக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகரின் ரெடிமேட் ஃபேஷன் ஸ்டோர் ஒன்றை திறப்பதற்காக புகழ் சென்று உள்ளார். அங்கு இவர் வரும் தகவல் வெளியாகி, ரசிகர்கள் கூட்டம் அந்தக் கடை முன்பாகத் திரண்டுவிட்டது. இதனை கண்ட புகழ் கொரோனா தொற்று கட்டுப்பாடான சமூக இடைவெளி யாரும் பின்பற்றாத்தை கண்டு, திறப்பு விழாவை விரைவில் முடித்து அவசர அவசரமாக இங்கிருந்து கிளம்பியுள்ளார்.
இதனிடையே கடையில் சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் கூட்டம் கூடியதை கண்ட நகராட்சி அதிகாரிகள், கடை உரிமையாளருக்கு அபராதம் விதித்துள்ளனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil