Biggboss Nadia Chang Story Update : விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சி தொடங்கி 12 நாட்களே ஆனாலும் கூட புதுமுக போட்டியாளர்கள் முதல்முறையாக திருநங்கைக்கு வாய்ப்பு என பல புதிய திருப்பங்கள் அரங்கேறியுள்ளது. ஆனால் நிகழ்ச்சி தொடங்கிய முதல்வார முடிவில் திருநங்கை நமீதா மாரிமுத்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதனால் தற்போது 17 போட்டியாளர்கள் வீட்டிற்குள் உள்ளனர்.
தற்போது இந்த சீசனின் முதல் எவிக்ஷன் ப்ராசஸ் நடைபெற்று வரும் நிலையில், முதல் வாரத்திலேயே எவிக்ஷனுக்காக 15 பேர் நாமினட் செய்யப்பட்டுள்ளனர். இதனால் வரும் வாரத்தில் நிகழ்ச்சியில் இருந்து யார் வெளியேற்றப்டுவார் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கிடையே, முதல்வார தொடக்கத்தில் போட்டியாளர்கள் தங்கள் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர். இதில் முதல்வாரத்தில் 9 போட்டியாளர்கள் மட்டுமே தங்களது கதையை கூறியிருந்த நிலையில், மீதமுள்ள போட்டியாளர்கள் கடந்த வாரம் தங்களது கதையை கூறினர்.
இதில் மலேசியாவில் இருந்து வந்த நதியா சங் கூறிய கதை அனைவரையும் சோகத்தில் மூழ்கடித்த்து என்று கூறலாம். இதில் அவர் சிறு வயது முதலே தனது தாய் தன்னையும், தனது சகோதரிகளையும் அடித்து துன்புறுத்தியதாகவும், தனது கணவர் சாங் வந்த பிறகு தான் பாதுகாப்பான, சந்தோஷமான வாழ்க்கை வாழ்வதாகவும், கணவருக்கு பெருமை சேர்க்கவே இந்த நிகழ்ச்சிக்கு தான் வந்ததாகவும் கூறியிருந்தார். இதை கேட்டு சகபோட்டியாளர்கள் அனைவரும் கண்ணீர் சிந்திய நிலையில், பிரியங்கா கூட மிகவும் சாங்கை போன்ற ஒரு கணவர் கிடைத்தால், ஒவ்வொரு பெண்ணும் மிகப் பெரிய இடத்தை அடைய முடியும் என்று கூறியிருந்தார்.
ஆனால் நதியா சங் கூறிய கதை அனைத்தும் பொய் என்று மலேசிய தமிழர் ஒருவர் பேஸ்புக் தளத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவில், எங்களை எல்லாம் பார்த்தால் உங்களுக்கு எப்படி தெரியுது. பைத்தியம் மாதிரி தெரியுதா? என்ன சொன்னாலும் நம்புவாங்கன்னு நினைப்பா.போனா போகிறது மலேசியாவில் இருந்து சென்ற போட்டியாளர் ஆயிற்றே ஆதரவு கொடுக்கலாம் என நினைத்தால், ஓவராக பேசுறீங்க. டிவி.,க்காக என்ன வேண்டுமானாலும் பேசுவீங்களா. இதில் மலேசிய போலீசை வேறு அசிங்கப்படுத்தி இருக்கீங்க.
18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு எங்கயும் வேலையே கொடுக்க மாட்டார்கள் நீங்க எப்படி 15 வயதிலேயே வேலைக்கு போனீர்கள். அதுவும் ஓட்டலில் ஹவுஸ்கீப்பிங் வேலை. அதை விட மலேசிய போலீசிடம் உங்க அம்மா அடி வாங்க விட்டு வேடிக்கை பார்த்ததாக கூறி உள்ளீர்கள். அதுவும் 12 – 13 வயதில். சேட்டை செய்து தெருவில் சுற்றும் ஆம்பள பசங்க எங்களையே சாப்பாடு போட்டு கவனித்து, வீட்டில் வந்து விட்டு போன மலேசியபோலீஸ் பெண் பிள்ளைகளை எப்படி அடித்திருப்பார்கள். அப்படியானால் ரொம்ப பெரிய கேசில் மாட்டிக்கிட்டீங்களோ.
இந்திய போட்டியாளர்கள் யாரும் தங்களின் பெற்றோர்களை விட்டுக் கொடுப்பதில்லை. மலேசிய போட்டியாளர்களுக்கு மட்டும் ஒன்று அப்பா சரியில்லாமல் இருக்கிருக்கிறார் அல்லது அம்மா சரியில்லாமல் இருக்கிறார். பெற்றோர்கள் இல்லை உங்களை பெற்ற நேரம் தான் சரியில்லை. பெற்றோர்கள் எப்படி இருந்தாலும் இப்படியா டிவி.,யில் சொல்லி மானத்தை வாங்குவீர்கள் என் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், நாடியா சொல்வதை போல் அவரது கணவர் சீனரோ, தமிழ் தெரியாதவரோ இல்லை. அவர் இங்கே பக்கத்தில் தான் இருக்கிறார். என் நண்பருடன் ஒரே பள்ளியில் படித்தவர் தான். நன்றாக சரளமாக தமிழ் பேசுவார். அதுவும் செந்தமிழில் பேச தெரிந்தவர். வெளி ஆட்களிடம் பூ சுற்றலாம். எனக்கு தெரிந்த வரை அவங்க அம்மாவும், அப்பாவும் ரொம்ப தங்கமானவங்க. ஒரு போட்டிக்காக எவ்வளவு கேவலமாக போறீங்க. ஒரு பெண் பிள்ளையை மலேசிய போலீஸ் அடித்தார்கள் என்று சொன்னதை தான் என்னால் ஏற்க முடியவில்லை. வெளிய வாங்க. காப்போடு காத்திருக்கிறார்கள் மலேசிய போலீஸ் என பேசி உள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil