தெலுங்கில் ஒரே படத்தில் ஒன்றாக நடிக்கும் தமிழ் நடிகைகள், பாடகியான பிரபல இயக்குநரின் மகள்...

மூவரும் எடுத்துக் கொண்ட செல்ஃபி மற்றும் புகைப்படங்களை மூவருமே அவரவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

மூவரும் எடுத்துக் கொண்ட செல்ஃபி மற்றும் புகைப்படங்களை மூவருமே அவரவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
தெலுங்கில் ஒரே படத்தில் ஒன்றாக நடிக்கும் தமிழ் நடிகைகள், பாடகியான பிரபல இயக்குநரின் மகள்...

நடிகை சமந்தாவும், நடிகை வரலட்சுமியும் உணவகத்துக்குச் சென்று ஒன்றாக மதிய உணவு சாப்பிட்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

Advertisment

சமந்தா தற்போது நடித்து வரும் 'யசோதா' என்ற தெலுங்குப் படத்தில் வரலட்சுமியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

ஓய்வு நேரத்தில் சமந்தாவும் வரலட்சுமியும் படத்தின் ஸ்டைலிஸ்ட், காஸ்ட்யூம் டிசைனரான நீரஜா கோனா ஆகியோருடன் ஐதராபாத்தில் உள்ள பிரபல ஹோட்டலில் ஒன்றாக மதிய உணவு சாப்பிட்டனர்.

மூவரும் எடுத்துக் கொண்ட செல்ஃபி மற்றும் புகைப்படங்களை மூவருமே அவரவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

விஜய்சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் சமந்தா தமிழில் நடித்துள்ள  'காத்து வாக்குல ரெண்டு காதல்' விரைவில் வெளியாக உள்ளது.

பாடகியான பிரபல இயக்குநரின் மகள்

Advertisment
Advertisements

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி. டாக்டருக்கு படித்த இவர் தற்போது நடிப்பின் மீது கொண்ட காதலால் நடிப்புத் துறைக்கு வந்துவிட்டார். கார்த்தி நடித்துவரும் விருமன் படத்தில் அறிமுகமாகி உள்ள அதிதி அதைத்தொடர்ந்து 3 படங்களில் நடிக்க இருக்கிறார்.

அதிதி முறைப்படி நடனமும், சங்கீதமும் படித்தவர். இதை அறிந்த இசை அமைப்பாளர் தமன், அதிதியை தான் இசையமைத்த படத்தில் பாட வைத்துள்ளார்.

தெலுங்குப் படமான கானி என்ற படத்தில் அதிதி பாடி உள்ளார். இந்த படத்தில் வருண் தேஜ், நவீன் சந்திரா உள்ளிட்டடோர் நடிக்கின்றனர்.

 தமனை பாய்ஸ் படத்தில் நடிகராக இயக்குநர் ஷங்கர் அறிமுகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வலிமை படம் இரண்டாம் பாகம் உருவாகுமா?

அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் முன்னோட்டம் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளதால் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த படத்தில் ஹியூமா குரோஷி ஹீரோயினாக நடித்துள்ளார். கார்த்திகேயா வில்லனாக மிரட்டியுள்ளார். 

வலிமை படத்தை தயாரித்துள்ள போனிகபூர் அளித்துள்ள பேட்டியில் வலிமை’ படம் கதாநாயகனுக்கும் வில்லனுக்கும் இடையே நடக்கும் விறுவிறுப்பான மோதலை கொண்டதாக இருக்கும், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை இருக்கை நுனிக்கு இழுக்கும். அடுத்தடுத்த பாகங்கள் உருவாகும் அளவுக்கு வலிமை படத்தின் திரைக்கதை உள்ளது என்று கூறியுள்ளார். 

இதன் மூலம் வலிமை படத்தின் இரண்டாம் பாகம் வர வாய்ப்பு உள்ளதா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கணவரை விவாகரத்து செய்ய நடிகை ஷில்பா ஷெட்டி முடிவு?

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியும் கணவர் ராஜ்குந்த்ராவை விவாகரத்து செய்து பிரிய முடிவு செய்து இருப்பதாக இந்தி பட உலகில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவரது கணவர் ராஜ்குந்த்ரா ஆபாச பட வழக்கில் சிக்கி சிறைக்கு சென்றபோது இருவரும் பிரிந்து விடுவார்கள் என வெளியான தகவலை ஷில்பா ஷெட்டி மறுத்தார். ஆனால் இப்போது மீண்டும் அதே விவாகரத்து தகவல் பரவும் நிலையில் அவர் எதுவும்  பதில் பேசவில்லை.

ராஜ்குந்த்ரா புதிதாக ரூ.39 கோடி மதிப்புள்ள சொத்துக்களை ஷில்பா ஷெட்டியின் பெயருக்கு மாற்றியுள்ளார். இதுதவிர கிணாரா பீச் வியூ வில் உள்ள பண்ணை வீட்டையும் ஷில்பா ஷெட்டி பெயருக்கு மாற்றி இருக்கிறார். பிரிந்து போகும் எண்ணத்துடனேயே கணவன் - மனைவி இடையே சொத்துகள் பிரிப்பு நடப்பதாக இந்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவையும், நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா  ஆகியோரும் சமீபத்தில் விவாகரத்து செய்வதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: