/tamil-ie/media/media_files/uploads/2021/03/Sheekala.jpg)
Actress Shakeela Join Congress Patry : குக் வித் கோமாளி நிகழச்சியின் மூலம் புகழ்பெற்ற நடிகை ஷகீலா தற்போது காங்கிரஸ் கட்சியின் இணைந்துள்ள நிலையில், கட்சியில் அவருக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி என இந்திய மொழிகள் அனைத்திலும் குறிப்பிடத்தக்க படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஷகீலா. தமிழில் கடைசியாக கடந்த ஆண்டு ஆணடு விமல் நடிப்பில் வெளியான கன்னிராசி படத்தில் நடித்திருந்த இவர், தற்போது விஜய் டிவியின் ஹிட் ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு கலக்கினார். இதில் கடந்த வாரம் நலைபெற்ற அரையிறுதி சுற்றில் தோல்வியடைந்த ஷகீலா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய ஷகீலா, குக் வித் கோமாளி நிகழ்ச்சி தனது நிலையை மாற்றியுள்ளதாக உணர்ச்சிகரமாக பேசி விடைபெற்றார். இந்நிலையில், தற்போது நடிகை ஷகீலா தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையில், இணைந்துள்ளார். இதில் அவருக்கு, மாநில பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படுவதாக அத்துறையின் தலைவர் மகாத்மா ஸ்ரீனிவாசன் ஆணை பிறப்பித்துள்ளார்.
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ளகாங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மேலும் அடுத்த மாதம் 6-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள நடிகை ஷகீலா, விரைவில் மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.