Advertisment

மாதவன் வலையில் சிக்கிய ஜோதிகா குடும்பம் : மீண்டு வர வழி இருக்கா? சைத்தான் விமர்சனம்

அஜய்தேவ்கன், ஜோதிகா, மாதவன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள சைத்தான் படம் எப்படி உள்ளது?

author-image
WebDesk
New Update
Madhavan Shaitaan
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சாக்லேட் பாயாக இருந்து இறுதிச்சுற்று படத்தின் மூலம் ரக்கர்டு பாயாக மாறிய நடிகர் மாதவன் முற்றிலும் மாறுபட்ட கேரக்டரில் நடித்துள்ள படம் தான் சைத்தான். சூப்பர் நேச்சுரல் ஹாரார் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் அஜய் தேவ்கன், ஜோதிகா இருவரும் முதன்மை கேரக்டரில் நடித்துள்ளனர்.

Advertisment

குடும்பத்தின் மீது பேரண்பு கொண்ட அஜய் தேவ்கன், தனது மனைவி ஜோதிகா, மகள் ஜான்வி, மகன், அங்கித் ராஜ் ஆகியோருடன் ஓய்வு நாளை கழிப்பதற்காக ஒரு பண்ணை வீட்டுக்கு செல்கிறார். அப்போர் இடையில் ஒரு ஹோட்டலில் சாப்பிட நிறுத்தும்போது மாதவனின் அறிமுகம் கிடைக்கிறது. அஜய் தேவ்கன் குடும்பத்திற்கு சில உதவிகளை செய்யும் மாதவன், ஜான்விக்கு இனிப்பு கொடுத்து தனக்கு கட்டுப்படும்படி வசியம் செய்துவிடுகிறார்.

அதன்பிறகு அஜய் தேவ்கன் குடும்பத்துடன் பண்ணை வீட்டுக்கு வரும் மாதவன் அந்த குடும்பத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து, ஜான்வியை தனக்கு தத்துகொடுக்குமாறு கேட்கிறார். இதன்பிறகு இந்த குடும்பம் என்ன ஆனது, ஜான்வியின் நிலை என்ன, மாதவன் யார் என்பது குறித்து கேள்விகள் தான் இந்த படத்தின் மீதமுள்ள திரைக்கதை. இறுதிச்சுற்று படத்தின் மூலம் தன்னை ரக்கர்டு பாயாக மாற்றிக்கொண்ட மாதவன் வனராஜ் என்ற வித்தியாசமாக கேரக்டரில் நடித்து அசத்தியுள்ளார்.

ஆரம்பத்தின் அஜய் தேவ்கனின் குடும்பம், அவர்களின் வாழ்வியல் என்று படம் மெதுவாக சென்றாலும், மாதவன் வனராஜூ-வாக என்ட்ரி ஆனவுடன் கதையில் விறுவிறுப்பு அதிகரிக்கிறது. ஒரு வீடு அந்த வீட்டில் நடக்கும் சம்பவங்கள் தான் கதை என்றாலும் கூட, எங்கேயும் சலிப்படையாமல் திரைக்கதை நகர்ந்துசெல்கிறது. வனராஜ் கேரக்டரில் மாதவன் ஸ்கோர் செய்தது போல் மகளை காப்பாற்ற என்ன வழி என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் கபீர் கேரக்டரில அஜய்தேவ்கன் தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஒரு ஹாரார் படத்திற்கு என்ன தேவையே அதை இசையமைப்பாளரும், ஒளிப்பதிவாளரும் சிறப்பாக செய்துள்ளனர். லாஜிக் மீரல்கள் இருந்தாலும், எங்கேயும் சலிப்படையாமல் விறுவிறுப்பாக செல்லும் ஒரு படத்தை பார்க்க வேண்டும் என்றால் இந்த சைத்தான் உங்களை திருப்திப்படுத்தும். இந்தியில் வெளியான இந்த படம் தற்போது ஒடிடி தளத்தில் இந்தியில தான் வெளியாகியுள்ளது. தனது அறிமுகப்படத்திற்கு பிறகு ஜோதிகா இந்தியில் நடித்துள்ள இரண்டாவது படம் சைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jyothika Madhavan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment