அந்த 15 லட்சத்தை ஞாபகப்படுத்திய தமிழ்ப்படம் 2... படத்தின் காட்சி வெளியீடு

சமீபத்தில் தமிழ்ப்படம் 2 படத்தின் 2 நிமிட காட்சி வெளியாகியுள்ளது. இந்தக் காட்சியில் ஜிஎஸ்டி முதல் மோடி வாக்குறுதி அளித்த 15 லட்சம் வரை கேலி செய்துள்ளனர்.

2010 -ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த தமிழ் படத்தில், தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களை கேலி செய்திருந்தனர். இந்தப் படம் அப்போதே வெற்றிபெற்றதால், இதன் 2ம் பாகத்தை 8 வருடங்கள் கழித்து மீண்டும் உருவாக்கியுள்ளனர். தமிழ்ப்படம் 2 இம்மாதம் வெளியாகவுள்ள நிலையில், பல நடிகர்களைக் கலாய்த்து தினமும் புதிய போஸ்டர்கள், டீஸர்கள் என்று ரிலீஸ் செய்கின்றனர். இந்நிலையில், இப்படத்தின் இரண்டு நிமிட ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது.

இந்தக் காட்சியில் தேவர் மகன் கெட் அப்பில் வரும் நடிகர் சிவா, ஜிஎஸ்டி, மோடி வாக்குறுதி அளித்த 15 லட்சம், அணைக் கட்டுவது, இறந்த ஸ்டீவ் ஜாப்ஸிடம் பேசுவதான பொய் வக்குறுதி மற்றும் ஜல்லிக்கட்டு என பல்வேறு விஷயங்களை வைத்துச் செய்துள்ளனர். இந்த ஸ்னீக் பீக் காட்சியை பார்த்த பிறகு பொதுமக்களிடம் இந்தப் படத்தின் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது.

×Close
×Close