/tamil-ie/media/media_files/uploads/2023/03/Dhanush.jpg)
கேப்டன் மில்லர் தனுஷ்
குறுகிய காலத்தில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக மாறிய ராஷ்மிகா மந்தனா அடுத்து தனுஷ் ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
வாத்தி, திருச்சிற்றம்பலம் படங்களை தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தனுஷ் அடுத்ததான் தனது 50-வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்த படததின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தனுஷ் அடுத்து தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனது 51-வது படத்தில் நடிக்க உள்ளார்.
தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராக உள்ள இந்த படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்தில் அறிமுகமான இவர் விஜயின் வாரிசு படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது தமிழில் 3-வது படமாக தனுஷூடன் இணைந்து நடிக்க உள்ளார்.
Beginning of a new journey.💃🏻❤️#D51
A @sekharkammula film 🎥@dhanushkraja@AsianSuniel@puskurrammohan#AmigosCreations@SVCLLPpic.twitter.com/dQFghtqd6R— Rashmika Mandanna (@iamRashmika) August 14, 2023
மேலும் படத்தின் இயக்குனர் சேகர் கம்முலா இதற்கு முன்பு இயக்கிய ஹேப்பி டேய்ஸ், ஃபிடா, லவ் ஸ்டோரி ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன. அதேபோல் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாரான வாத்தி படம் நல்ல வரவேற்பை பெற்றது.இதனால் தனுஷ்க்கு தெலுங்கிலும் மார்க்கெட் அதிகரித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.