பாண்டியன் ஸ்டோர் 2... முக்கிய கேரக்டரில் இளையராஜ மருமகள் : புதிய அப்டேட்

விஜய் டிவியின் முக்கிய சீரியலிகளில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். ஸ்டாலின் முத்து சுஜிதா தனுஷ், குமரன், வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்

விஜய் டிவியின் முக்கிய சீரியலிகளில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். ஸ்டாலின் முத்து சுஜிதா தனுஷ், குமரன், வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்

author-image
WebDesk
New Update
Pandian Stores Serial 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முதல் சீசன் சிறைவடைய உள்ள நிலையில், விரைவில் தொடங்க உள்ள 2-வது சீசனுக்காக ப்ரமோ வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே இந்த சீரியலில், இசையமைப்பாளர் இளையராஜாவின் மருமகளும், நடிகையுமான விலாசினி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

விஜய் டிவியின் முக்கிய சீரியலிகளில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். ஸ்டாலின் முத்து சுஜிதா தனுஷ், குமரன், வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த சீரியல் இன்னும் ஓரிரு தினங்களில் முடிவடைய உள்ளது. சகோதர பாசம், கூட்டுக்குடும்பம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உள்ளிட்ட இன்றைய பல தேவைகளை வலியுத்தும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த சீரியலுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம்.

இந்த சீரியல் முடிவடைய உள்ள நிலையில், அடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 வரும் அக்டோபர் 30-ந் தேதி தொடங்க உள்ளது. முதல் சீசனில் நடித்த ஸ்டாலின் முத்து தவிர மற்ற அனைவரும் புதுமுகங்களாக நடித்துள்ள இந்த சீரியலின் ப்ரமோ ப்ரமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் முக்கிய கேரக்டரில் நடிக்க நடிகை விலாசினி ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சீரியலில் பாண்டியனின் மூத்தமகள் கேரக்டரில் விலாசினி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு ஜீ தமிழின் தவமாய் தவமிருந்து சீரியலில் மார்கண்டேயன் கேரக்டரில் மகளாக நடித்திருந்த விலாசினி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றிருந்தார். தவமாய் தவமிருந்து சீரியல் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், தற்போது விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2-ல் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Advertisment
Advertisements

நடிப்பு மட்டுமல்லாமல் பாடகி மற்றும் டப்பிங் கலைஞராகயும் இருக்கும் விலாசினி, இசையமைப்பாளர் இளையராஜாவின் உறவினர் அவரது மருமகள் ஆவார். பாடல் பாட வாய்ப்புக்காக அலைந்து திரிந்த இவர், பாட வாய்ப்பு கிடைக்காததால் நடிப்புக்கு வந்ததாகவும், கஷ்டப்படும் காலத்தில் தனக்கு யாரும் உதவவில்லை என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pandian Stores Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: