விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஹேமா ராஜ்குமார் அரசு பேருந்தில் தனது தோழிகளுடன் திருப்பதி பயணம் செய்தது தொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமானவர் ஹேமா ராஜ்குமார். பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் 2-வது மருமகளாகன இவர், வில்லியா அல்லது நல்லவரா என்ற குழப்பம் சீரியலின் தீவிர ரசிகர்களுக்கு எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த அளவிற்கு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். நடிப்பு மட்டுமல்லாமல் ஹேமா ராஜ்குமார் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கிறார்.
இதில் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அதேபோல் ஹேமாஸ் டைரி என்ற யூடியூப் சேனலில் அவ்வப்போது சில வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் அரசு பேருந்தில் திருப்பதி பயணம் சென்றது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் எனக்கு கிடைத்த பெண் தோழிகளுடன் ரொம்பா நாளா ஒரு ட்ரிப் போகனும்னு ப்ளான் பண்ணி அதை இப்போது தான் செய்ய முடிந்தது. இதில் எங்களின் முதல் ட்ரப்பாக நாங்கள் திருப்பதி செல்கிறோம். எனக்கு கார் ஓட்ட தெரியும் என்றாலும் அவ்வளவு தூரம் போய்ட்டு ரிட்டன் வரதுக்குள்ள டயர்டாகிடும். அதனால் பத்திரமாக கூட்டிக்கிட்டு போயட்டு கூட்டிகிட்டு வர மாதிரி ஒன்றை தேடினோம்.
அப்போது தான் டிடிடிசி கிடைத்தது. இது தமிழ் நாடு டூரிசம். இங்கு ஒரு பேக்கேஜ்ஜாக பிக்ஸ் பண்ணிட்டு சென்னையில் இருந்து பல இடங்களுக்கு கூட்டிகிட்டு போறாங்க. அந்த வகையில் சென்னையில் இருந்து திருப்பதி போய்ட்டு சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் அங்கிருந்து சென்னை கொண்டு வந்து விட்டுவிடுவார்கள். இது ஒருநாள் ட்ரிப் தான். இந்த பயண்தில் ஒருவருக்கு டிக்கெட் கட்டணம் ரூ2000.
நாங்கள் முதல்முறை பஸ்ஸில் போவதால் பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து புக் செய்துவிட்டோம் என்று கூறி வீடியோவை தொடங்கும் ஹேமா பஸ் பயணத்தில் நடந்த சுவாரஸ்யமாக அனுபவங்கள் குறித்து தனது தோழிகளுடன் பேசிக்கொண்டே வருகிறார். திருப்பதி வரை தமிழ்நாடு டூரிசம் பஸ்ஸில் சென்ற அவர், அங்கிருந்து கோவிலுக்கு ஆந்திரா பஸ்ஸில் சென்றதாகவும், சாமி தரிசனம் முடிந்து மீண்டும் ஆந்திரா பஸ்ஸில் ஏறி திருப்பதியில் வந்து இறங்கி தமிழ்நாடு டூரிசம் பஸ் மூலம் மீண்டும் தமிழ்நாட்டுக்கு திரும்புதாகவும் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.