பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது முல்லைக்கு குழந்தை பிறந்த்து லாஜிக் இல்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். சகோதர பாசத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தாலும் அவ்வப்போது சில ட்ரோல் மற்றும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. ஆனாலும் அவ்வப்போது பல திருப்பங்களுடன் அரங்கேறி வருகிறது.
சமீபத்தில் 3 குடுபம்பங்களாக பிரிந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போது கண்ணன் இணைந்த்தால் 2-ஆக மாறியுள்ளது. விரைவில் ஜீவா மீனா தம்பதியும் இணைந்துவிட்டால் சீரியலுக்கு என்ட் கார்டு போட்டுவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது தனத்திற்கு பிரஸ்ட் கேன்சர் என்று புது திருப்பதை கொண்டு வந்த சீரியலை மீண்டும் உச்சக்கட்ட பரபரப்பிற்கு கொண்டு சென்றுள்ளனர். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு முல்லை கர்ப்பமான நிலையில், அடுத்து ஐஸ்வர்யா தனம் என அடுத்தடுத்து கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தனர். ஒரே வீட்டில் அனைவரும் ஒன்றாக தூங்கி வந்தாலும் எப்படி 3 பேரும் கர்ப்பம் ஆனார்கள் என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி இணையத்தில் ட்ரோல் செய்து வந்தனர். இந்த ட்ரோல்களை சமாளிப்பதற்காகவே திடீரென ஒரு பிரச்சனையை கிளப்பி குடும்பத்தை பிரித்துவிட்டனர்.
இதனிடையே தற்போது முல்லைக்கு விபத்து நடந்த்தால் ஆப்ரேஷன் செய்து குழந்தையை எடுத்தவிட்டனர். இதனால் 7 மாத்த்த்தில் குழந்தை பிறந்தது என்று கூறி வருகின்றனர். ஆனால் இதில் தான் தற்போது ரசிகர்களுக்கு ஒரு பெரிய சந்தேகம் எழுந்துள்ளது. அதனாவது கடந்த ஏப்ரல் மாதம் 11-ந் தேதி வந்த எபிசோட்டில் தனம் அடுத்த மாதம் வந்தால் முல்லைக்கு 7-வது மாதம் என்று கூறியிருந்தார். அதன்பிறகு ஏப்ரல் 21-ந் தேதி முல்லையின் வளைகாப்பு நடைபெற்றது.
இதற்கு அடுத்த சில தினங்களுக்கு பிறகு கதிர் முல்லை இருவரும் ஹாஸ்பிடல் போகும்போது விபத்து ஏற்பட்டு ஹாஸ்பிட்டலில் சேர்க்கப்படுகிறார். அப்போது அவருக்கு ஆப்ரேஷன் நடந்து குழந்தை பிறக்கிறது. அதற்கு முன்பாக தனம் முல்லைக்கு இப்போ 7 மாதம் தான் ஆகிறது இப்போது ஆப்ரேஷன் நடந்தால் சரியா வருமா என்று கேட்கிறார். இந்த கேள்விதான் தற்போது சந்தேகத்தின் உச்சமாக இருக்கிறது. தனம் டாக்டரிடம் முல்லைக்கு 7 மாதம் தான் என்று சொன்ன எபிசோடு கடந்த ஜூன் 14-ந் தேதி ஒளிபரப்பானது. இத்தனை மாதங்கள் கடந்தாலும் முல்லைக்கு எப்படி 7 மாதம் தாண்டாமல் இருகிறது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது ஒருபுறம் ட்ரோல் ஆகி வரும் நிலையில், அனைவரும் இணைந்தால் குடும்பம் ஒன்றாகிவிடும் சீரியல் முடிந்துவிடும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தனத்துக்கு கேன்சர் என்று சொல்லிவிட்டனர். இதை வீட்டில் சொல்லாமல் மறைக்க தனம் முயற்சிக்கிறார். இதனால் இந்த ஒரு டாப்பிக்கை வைத்து இன்னும் எத்தனை நாட்கள் இழுக்க போகிறார்கள் என்று தெரியவில்லை என்று கூறி வருகின்றனர்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“