New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/08/Esthar-Anil.jpg)
பாபநாசம் படத்தில் நடித்த டிஸ்தர் அனில்
மலையாளத்தில் 2021-ம் ஆண்டு வெளியான த்ரிஷயம் 2, தெலுங்கு த்ரிஷ்யம் 2 உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்த எஸ்தர், பாபநாசம் படதிற்கு பிறகு தமிழில் வி3 என்ற படத்தில் நடித்திருந்தார்.
பாபநாசம் படத்தில் நடித்த டிஸ்தர் அனில்
பாபநாசம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த எஸ்தர் அனில் தற்போது வெளியிட்டுள்ள ஓணம் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரளா மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்தவர் எஸ்தர் அனில். 2010-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நல்லவன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர்.
அதனைத் தொடர்ந்து அதே 2010-ம் ஆண்டில் ஒருநாள் வரும், சகுடுபம் ஷியமலா, காக்டைல் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்த படங்கள் அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.
அடுத்தடுத்த வருடங்களில் பல படங்களில் நடித்திருந்த எஸ்தர் அனில், 2013-ம் ஆண்டு மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் என்ற படத்தில் நடித்திருந்தார்.
மோகன்லால் – மீனா இணைந்து நடித்திருந்த இந்த படததில் மோகன்லாலின் இளையமகளாக நடித்த எஸ்தரின் நடிப்பு பலரின் பாராட்டு பாராட்டுக்களை பெற்றது.
அதனைத் தொடர்ந்து வெங்கடேஷ் நடித்த தெலுங்கு த்ரிஷ்யம், தமிழில் கமல்ஹாசன் நடித்த பாபநாசம் (த்ரிஷயம் ரீமேக்) ஆகிய படங்களிலும் எஸ்தர் நடித்திருந்தார்.
அதேபோல் மலையாளத்தில் 2021-ம் ஆண்டு வெளியான த்ரிஷயம் 2, தெலுங்கு த்ரிஷ்யம் 2 உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்த எஸ்தர், பாபநாசம் படதிற்கு பிறகு தமிழில் வி3 என்ற படத்தில் நடித்திருந்தார்.
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் எஸ்தர் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார், அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஓணம் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.