நல்லவர்னு நம்பி ஏமார்ந்து விட்டேன்... ரவீந்தர் மீது சென்னை போலீசில் பரபரப்பு புகார்

தற்போது அமெரிக்க வாழ் இந்தியர் விஜய் என்பவர் ரவீந்திரன் மீது பண மோசடி புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது அமெரிக்க வாழ் இந்தியர் விஜய் என்பவர் ரவீந்திரன் மீது பண மோசடி புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ravindran Maha

ரவீந்திரன் சந்திரசேகர் - மகாலட்சுமி

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளரும் சீரியல் நடிகை மகாலட்சுமியின் கணவருமான ரவீந்திரன் சந்திரசேகர் மீது அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படத்தியுள்ளது.

Advertisment

தமிழில் சாந்தனு நடிப்பில் வெளியான முருங்கைக்காய் சிப்ஸ், நட்புன்னா என்னானு தெரியுமா உள்ளிட்ட படங்களை தனது லிப்ரா புரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்தவர் ரவீந்திரன் சந்திரசேகர். தொடர்ந்து அடுத்தடுத்து பட்ஜெட் படங்களை தயாரித்து வரும் இவர், கடந்த ஆண்டு சீரியல் நடிகை மகாலட்சுமியை திருப்பதியில் வைத்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்கள் திருமணம் தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில், பலரும் வாழ்த்துக்களையும், சிலர் விமர்சனங்களையும் கூறி வந்தனர். சமீப காலமாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியபோவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், தற்போது அமெரிக்க வாழ் இந்தியர் விஜய் என்பவர் ரவீந்திரன் மீது பண மோசடி புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் மூலமாக சென்னை காவல்துறையில் அளிக்கப்பட்ட இந்த புகாரில் விஜய், ரவீந்தர் தனக்கு அனுப்பிய இரு செக்-கள் வங்கியில் பணமில்லாமல் திரும்பிவிட்டது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவிகேன். ரவீந்தரை நல்லவர் என நம்பி நான் ஏமாற்ந்துவிட்டேன் என்றும் கூறியுள்ளார்.

Advertisment
Advertisements

இந்த புகார் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ரவீந்தர் பணத்தை செட்டில் செய்து விடுவதாகவும் சமாதானமாக போக தான் தயாராக இருப்பதாக கூறியுள்ளார் என்று தகவல் வெளியாகியது. ஏற்கனவே மனைவி மகாலட்சுமியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக அவ்வப்போது வதந்திகள் பரவி வரும் இந்த சூழ்நிலையில், ரவீந்தர் மீதான இந்த மோசடி புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: