Advertisment
Presenting Partner
Desktop GIF

கடவுளுக்கே வந்த சோதனை... கண்ணதாசன் எழுதிய வேதனை : யார் கொடுத்த சாபம்?

புலவர் ஒருவர் கொடுத்த சாபத்தால் கோவில் திருவிழா நடைபெறாத நிலையில், கடவுளுக்காக கண்ணதாசன் தனது வேதனையை புத்தகத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Kannadasan MSV Manithan

கண்ணதாசன்

தமிழ் சினிமாவில் ஈடு இணையற்ற கவிஞராக போற்றப்படும் கண்ணதாசன், கடவுளுக்கு சோதனை வந்ததை நினைத்து தனது மனவேதனையை தனது நூலில் குறிப்பிட்டுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

Advertisment

மனிதனின் அத்தனை உணர்ச்சிகளுக்கும் தனது பாடல்கள் மூலம் ஆறுதல் அளித்தவர் தான் கவியரசர் கண்ணதாசன். காதல், சோகம், மகிழ்ச்சி, என அனைத்திற்கும் தனது வரிகள் மூலம் உயிர் கொடுத்த கண்ணதாசன், வாழ்க்கையின் தத்துவங்களையும், தனது வாழ்வில் நடந்த தான் சந்தித்த சம்பவங்களையும் தனது பாடல்கள் மூலம் வெளிப்படுத்திய பெருமைக்கு சொந்தக்காரராக இருந்தவர்.

பாடல்கள் மட்டுமல்லாமல், தயாரிப்பாளர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா என பல திறமைகயை உள்ளடக்கிய கண்ணதாசன், பல புத்தகங்களையும எழுதியுள்ளார். இதில் அவர் எழுதிய ஒரு புத்தகத்தில் காலமேக புலவர் பற்றிய ஒரு குறிப்பு அடங்கியுள்ளது. கடவுளிடம் தமிழ் வரம் பெற்றவர் என்று அழைக்கப்படும் காலமேக புலவர் ஒருமுறை திருநெல்வேலியில் இருந்து ஸ்ரீரங்கத்திற்கு நடந்து வந்துள்ளார்.

அப்போது இடையில் கயத்தாறு பகுதி வந்தபோது அவருக்கு கடுமையான பசி ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் பெருமாள் கோவிலில் திருவிழா நடைபெற்று வந்துள்ளது. அங்கு சென்றால் தனக்கு சாப்பிட எதாவது கிடைக்கும் என்று நினைத்த காலமேக புலவர் அங்கு சென்றபோது, சாமி கிரகத்தை தூக்குவதற்கு அனைவரும் தயாராக இருந்தனர். இடையில் காலமேக புலவர் சென்றபோது அவரையும் சேர்த்து சாமியை தூக்க அழைத்து சென்றுள்ளனர்.

கடுமையான பசியில் இருந்த காலமேக புலவர் சாமியை தூக்கிக்கொண்டு அவர்களுடன் கயத்தாறு தெருவில் நடந்துள்ளார். ஊர்வலம் முடிந்தபின், அனைவரும் கோவிலுக்கு வந்தபோது, தனக்கு எதாவது சாப்பிட கிடைக்கும் என்று காலமேக புலவர் எண்ணிக்கொண்டிருந்தார். அப்போது சாமி தூக்கியவர்களுக்கு உண்டக்கட்டி கொடுத்துள்ளனர். ஆனால் காலமேக புலவருக்கு கொடுக்காமல் நீ தள்ளிப்போ என்று கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியான அவர் கயத்தாறு பெருமாளிடம் முறையிட்டு ஒரு பாடலை பாடியுள்ளார்.

‘’பாலை மனம் கமழுகின்ற கயத்தாற்று பெருமாளே பாகாரா கேள், வேலை என்றால் இவ்வேளை 16 நாழிகைக்கு மேல் ஆயிற்று. என் தோலை உரித்ததுமன்றி நம்பியானையும் (அய்யர்) சுமக்க செய்தாய். நாளை இனி யார் சுமப்பார். எந்நாளும் உன் கோவில் நாசம் தானே’’ என்று காலமேக புலவர் பசியோடு பாடியுள்ளார். அதன்பிறகு அவர் அங்கிருந்து சென்றுவிட்ட நிலையில், அந்த வருடத்திற்கு பிறகு அந்த கயத்தாறு பெருமாள் கோவிலுக்கு திருவிழாவே நடைபெறவில்லை என்று கண்ணதாசன் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து நெல்லை ஜெயந்தா என்பவர் தனது யூடியூப் சேனலில் பேசுகையில், கோவில் திருவிழா குறித்து முடிவு செய்து பேச தொடங்கினாலும், ஏதாவது ஒரு பிரச்சனை வந்து பேச்சுவார்த்தையுடன் திருவிழா முயற்சி நின்றுவிடும். காலமேக புலவர் கொடுத்த சாபத்தால் யார் நினைத்தாலும் கயத்தாறு பெருமாள் கோவிலுக்கு திருவழா நடந்த முடியவில்லை. அதன்பிறகு காலமேக புலவருக்கு ஒரு சிலை செய்து வழிபட்டபின் இப்போது அந்த பெருமாள் கோவிலில் திருவிழா நடந்துகொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kannadasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment