Advertisment

ஈழத் தமிழருக்கு ஆதரவு... அரசவைக் கவிஞர் மீது நடவடிக்கை எடுத்தாரா எம்.ஜி.ஆர்?

ஈழத்தமிழருக்கு ஆதரவாக செயல்பட்டதால் எம்.ஜி.ஆர் தன் மீது நடவடிக்கை எடுக்க முயற்சித்தார் என்று அப்போது அரசவை கவிஞராக இருந்த புலமை பித்தன் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Pulamai Pithan MGR

எம்.ஜி.ஆர் - புலமை பித்தன்

தனது வீட்டில் எப்போதும் ஈழத்தமிழர்கள் சந்திப்பு நடைபெற்று வந்ததால் எம்.ஜி.ஆர் தன்மீது நடவடிக்கை எடுக்க முயற்சித்ததாக கவிஞர் புலமை பித்தன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Advertisment

இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்ட நிலைமை மற்றும் அவர்களின் வாழ்வாதாரங்கள் குறித்து பெரும்பாலான மக்கள் அறிந்த ஒரு தகவல். விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் உதவி செய்ததாகவும் தகவல்கள் உள்ளன. அதே சமயம் தனது வீட்டில் ஈழ தமிழர்கள் மக்களை சந்தித்ததால் எம்.ஜி.ஆர் தன் மீது நடவடிக்கை எடுக்க முயற்சித்தார் என்று புலமை பித்தன் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு அவர் அளித்த பேட்டியில், ஒருநாள் இரவு 12- மணிக்கு எம்.ஜி.ஆர் எனக்கு போன் செய்தார். அறிவாலயத்தில் எனது கார் நின்றதாகவும், நான் கலைஞருடன் சேரப்போகிறேன் என்று யாரோ எம்.ஜி.ஆரிடம் சொன்னதால், அவர் அந்த நேரத்தில் என்னை அழைத்து, கலைஞரை சந்தித்தீர்களா என்று கேட்டார். அப்போது நான் எதற்கு கலைஞரை பார்க்க வேண்டும்? உங்களுக்கு யார் சொன்னது என்று கேட்டேன்.

இல்லை நீங்கள் பொய் பார்த்தீர்ளா என்று நான் கேட்டேன் என எம்.ஜி.ஆர் சொன்னார். அப்போது நான், அவரை பார்க்க வேண்டும் என்றால் நள்ளிரவில் போய்தான் பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பகலில் போய் சந்திப்பேன். உங்களிடம் வந்து சொல்லிவிட்டு, உங்களிடம் இருப்பதற்கு எனக்கு விருப்பம் இல்லை. அதனால் நான் கலைஞரிடம் சென்று சேரப்போகிறேன் என்று நேரடியாக உங்களிடமே சொல்லிவிட்டு சென்றிருப்பேன் என்று சொன்னேன்.

அதன்பிறகு அடுத்த கேள்வியாக விடுதலை புலிகளுக்கு என்னை காட்டிலும் கலைஞர் அதிகமாக உதவி செய்துவிட்டாரா என்று கேட்டார். அவரும் செய்யமாட்டார். நீங்களும் செய்யவில்லை. செய்யவும் மாட்டீர்கள். நான் அந்த பிள்ளைகளுக்கு சொல்லி இருக்கிறேன். நீங்கள் உங்கள் காலிலேதான் நிற்க வேண்டுமே தவிர, தமிழ் நாட்டில் இருக்கும் அரசியல் தலைவர்களை நம்பி நீங்கள் எதுவும் செய்ய கூடாது என்று சொல்லி இருக்கிறேன்.

இதை கேட்ட எம்.ஜி.ஆர், ஏன் அப்படி சொன்னீர்கள் என்று கேட்டார். ஆமாம் நீங்கள் இதுவரை அவர்களுக்காக எதுவும் செய்யவில்லை என்று சொன்னபோது. ஜெயவர்த்தனே டெல்லிக்கு வருகிறார். அவர் வந்துவிட்டு சென்றவுடன் நான் தம்பிகளை அழைத்து உதவி செய்கிறேன் என்று சொன்னார். நான் அதற்கு நன்றி என்று சொன்னேன். அதன்பிறகு என்னை அரசவை கவிஞராக நியமிக்க உள்ளதாக சொன்னார். அதற்கும் நான் நன்றி என்ற ஒற்றை சொல்லில் முடித்துக்கொண்டேன்.

அவருக்கும் எனக்கும் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக 3-4 மாதங்கள் அவருடன் நான் பேசாமல் இருந்தேன். ஒரு கட்டத்தில் எப்போதும் எனது வீட்டில் விடுதலை புலிகள் இருக்கிறார்கள். அவர்களை சந்திக்கிறேன் என்ற காரணத்தினால் என்னை அரசவை கவிஞர் பதவியில் இருந்து நீக்கிவிடவும் முடிவு செய்தார். ஒருநாள் ராஜாராம் என்பரை தொடர்புகொண்டு அவர் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க போகிறேன் என்று கூறியுள்ளார்.

நீங்கள் அவர் மீது நடவடிக்கை எடுத்தால் அவர் லஞ்சம் வாங்கிவிட்டார். ஊழல் செய்துவிட்டார் என்று சொல்வார்களா? ஈழ விடுதலை பற்றி பேசிக்கொண்டிருப்பதால் எம்.ஜி.ஆர் நடவடிக்கை எடுத்தார். மலையாளி மலையாளி தான் என்று சொல்வார்கள் என்று ராஜா ராம் கூறியிருக்கிறார். அதன்பிறகு என்னை வர சொன்ன ராஜா ராம் இது பற்றி பேசினார். அதற்கு நான் நடவடிக்கை என்றால் என்ன அர்த்தம் இந்த கொடி போட்ட காரை வாங்கிவிடுவீர்கள் அவ்வளவு தானே, காரை கோட்டைக்கு அனுப்பட்டுமா அல்லது தோட்டத்திற்கு அனுப்பட்டுமா என்று கேட்டேன்.

உங்களுக்கு வேண்டுமானால் கொடி போட்ட காரும் கோட்டையும் தேவை, எனக்கு எனது கொள்கை மட்டும் தான் தேவை. எனது ஈழம் விடுதலை பெற வேண்டும் என்று சொன்னேன். நான் போன பிறகு மீண்டும் ராஜாராமை தொடர்புகொண்ட எம்.ஜி.ஆர், புலவர் என்ன சொன்னார் என்று கேட்க, நான் காரை கோட்டைக்கு அனுப்பட்டுமா அல்லது தோட்டத்திற்கு அனுப்பட்டுமா என்று கேட்டதை கூறியுள்ளார். அதன்பிறகு எம்.ஜி.ஆர் சரி விடு போகட்டும் என்று சொல்லிவிட்டு போய்விட்டார் என புலமை பித்தன் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mgr
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment