பாடலாசிரியர் சினேகன் - கன்னிகா தம்பதி இசையமைப்பாளர் இளையராஜாவிடம் ஆசீர்வாதம் வாங்கிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், இந்த புகைப்படங்கள் குறித்து விமர்சித்த பலருக்கும் நடிகை கன்னிகா பதில் அளித்துள்ளார்.
Advertisment
தமிழ் சினிமாவில் பல பாடல்களை எழுதியுள்ளவர் சினேகன். ஆனால் மக்கள் மத்தியில் இவரை பிரபலமாக்கியது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். விஜய் டிவியின் முக்கிய ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் இதுவரை 6 சீசன்கள் முடிந்திருந்தாலும், 2017-ம் ஆண்டு நடைபெற்ற முதல் சீசனை யாராலும் மற்ற முடியாது. இந்த நிகழ்ச்சியில் ஆரவ் சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், சினேகன் 2-வது இடம் பிடித்தார்.
பிக்பாஸ் வீட்டில் அனைவரையும் கட்டிப்பிடித்து நட்பாக பழகும் குணத்துடன் இருந்த சினேகன் கட்டிப்பிடி வைத்தியர் என்று போற்றப்பட்ட நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியே இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு அடையாளத்தை கொடுத்தது என்று சொல்லலாம. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சினேகன் எழுதிய பல பாடல்கள் இவர் எழுதியதா என்று ஆச்சரியத்துடன் கேட்கும் நிலையும் ஏற்பட்டது.
40-வயதை கடந்த சினேகன் தன்னை விட 16 வயது இளைய பெண்ணான சீரியல் நடிகை கன்னிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணத்தில் கமல்ஹாசன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். திருமணத்திற்கு பின் சினேகன் தனது மனைவியுடன் இணைந்து ரீல்ஸ் உள்ளிட்ட பலவீடியோக்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு புகைப்பட்த்தை வெளியிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா நேற்று தனது 80-வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், அவரை நேரில் சந்தித்த சினேகன் – கன்னிகா தம்பதி ஆசீர்வாதம் வாங்கினர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், ‘ஆசீர்வாதம் பண்ற போது செருப்ப கழட்டனும்னு தோனல அவருக்கு. ஆசீர்வாதம் வாங்கும் போது கால தொட்டு தான் வாங்குவாங்க. செருப்ப கழட்டி இருக்கலாம் என்று ரசிகசர் ஒருவர் கமண்ட் செய்திருந்தார்.
இதற்கு பதில் அளித்த கன்னிகா ‘அவர தப்பா நினைக்காதீங்க.அவருக்கு சில மெடிக்கல் பிரச்சனைனால அவர் எப்போதும் வீட்ல கூட சாக்ஸ் அல்லது செருப்பு போட்டு தான் இருப்பாங்க’ என்று பதில் கூறியுள்ளார். சினேகனின் திருமணத்திற்கு வர முடியாத இளையராஜா, சினேகன் – கன்னிகா தம்பதியை நேரில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில், அவர்களுக்கு ஒரு தங்க மோதிரத்தையும் கல்யாண பரிசாக வழங்கியிருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil