/indian-express-tamil/media/media_files/YURWg2fBhXIyLMELOpjA.jpg)
கவிஞர் வைரமுத்து
படிக்காத பக்கங்கள் என்ற படத்தில் மதுவுக்கு எதிராக கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய பாடல் ஒன்று இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
தமிழ் சினிமாவில் இயக்குனர் செல்வம் மாதப்பன் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் படிக்காத பக்கங்கள். யாஷிகா ஆனந்த், பிரஜின் நாயகன் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் கைதி ஜார்ஜ் மரியன், பாலாஜி, லொள்ளு சபா மனோகரன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். எஸ்.முவி பார்க், பவுர்ணமி பிச்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் டீசர் வெளியானதை தொடர்ந்து, தற்போது இந்த படத்தில் இடம்பெற்றுள்ள, மதுவுக்கு எதிரான பாடல் ஒன்று பலரையும் கவர்ந்துள்ளனர். மேலும் சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. கவிப்பேரரசு வைரமுத்து இந்த பாடலை எழுதியுள்ள நிலையில், இந்த பாடல் வரிகளை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மரணத்திற்கு முன்பே
— வைரமுத்து (@Vairamuthu) April 27, 2024
மனிதனைப் புதைத்துவிடுகிறது
மது
ஒவ்வொரு மணி நேரத்திற்கும்
16 மதுச் சாவுகள் நிகழ்கின்றன
44 முதல் 67 விழுக்காடு
சாலை விபத்துகள்
மதுவால் நேர்கின்றன
20மில்லி ரத்தத்தில் கலந்தாலே
பார்வையைப் பாதிக்கிறது மது
30மில்லி கலந்தால்
தசை தன் கட்டுப்பாட்டை
இழந்துவிடுகிறது… pic.twitter.com/X3JSM2xjeL
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
மரணத்திற்கு முன்பே
மனிதனைப் புதைத்துவிடுகிறது
மது
ஒவ்வொரு மணி நேரத்திற்கும்
16 மதுச் சாவுகள் நிகழ்கின்றன
44 முதல் 67 விழுக்காடு
சாலை விபத்துகள்
மதுவால் நேர்கின்றன
20மில்லி ரத்தத்தில் கலந்தாலே
பார்வையைப் பாதிக்கிறது மது
30மில்லி கலந்தால்
தசை தன் கட்டுப்பாட்டை
இழந்துவிடுகிறது
ஒருநாட்டின் மனிதவளம்
தவணைமுறையில் சாகிறது
ஒழுக்கக்கோடுகள் அழிந்து
ஒழுக்கக்கேடுகள் நுழைகின்றன வாழ்வியலில்
மதுவுக்கு எதிராகநான் எழுதிய ஒருபாடலைஇன்று மாலை வெளியிடுகிறோம்
இப்போதே உங்கள்
கண்களுக்கும் காதுகளுக்கும்
என பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.