லியோ படத்தின் நான் வரவா பாடல் மோசமாக உள்ளது என்றும், இந்த பாடருக்கு தடை விதிக்க வேண்டும் அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஜூன் 22-ந் தேதி விஜய் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டது. நான் வரவா தனியா என்ற இந்த பாடல் விஜய் குரலில் வெளியானது.
அனிருத் இசையில் வெளியான இந்த பாடல் விஜய் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், பொதுவான ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் அனைத்து மக்ள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா லியோ படத்தின் ''நான் வரவா தனியா'' பாடல் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், லியோ படத்தின் பாடல் முழுவதும் மது மற்றும் புகைப்பிடிப்பதை ஊக்குவிக்கும் வகையில் உளளது. புகைப்பிடித்தால் பவர் கிடைக்குதுனு சொல்றாங்க, மில்லி உள்ள போன கில்லி வெளிய வரும் இந்த மாதிரியான வார்த்தைகள் வரிகள் எல்லாம் பயன்படுத்தலாமா? நடிகர் விஜய்க்கு 5 வயதில் இருந்து ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது சமூகத்தின் அக்கறையுடன் இருக்க வேண்டாமா?
பொறுக்கித்தனமான பாட்டு, இதெல்லாம் ஒரு பாடலா? எத பாடுறோம்னு கூட தெரியலேன்னா என்ன மண்ணாங்கட்டிக்கு நீங்க பொதுநலம் குறித்து இந்த மாணவர்களுக்கெல்லாம் விருது கொடுக்குறீங்க. சமூக சேவை செய்து நீங்கள் மக்களை ஏமாற்றியது போதும். சிகரெட்டை புரமோஷன் பண்ண விஜய் எத்தனை கோடி வாங்குனாருன்னு இந்த இளைஞர்களுக்கு தெரியுமா?
விரலுக்கு இடையில் தீப்பந்தம் என்று பாடுகிறார். இதெல்லாம் ஒரு வரியா இதை எழுதின அசல் கோளாறு முழு கோளாறான ஆளு. இந்த மாதிரி கீழ்த்தனமான வரிகளை விஜய் எப்படி பாடுகிறார்? அவருக்கு எப்படி மனசு வருகிறது? சர்கார் படத்தில் முதல் காட்சிசே சிகரெட் வச்சித்து இருந்ததற்கு நாள் எதிர்ப்பு தெரிவித்தேன். அதன்பிறகு வாயில சிகரெட் வச்சி நடிக்க மாட்டேனு சொன்னாரு ஆனால் இப்போது இந்த பாடல் முழுவதும் சிகரெட்டுடன் வருகிறார்.
இதை பார்த்து ஒரே ஒரு இளைஞனோ, ஒரு பள்ளி மாணவனோ வீணா போனா அதற்கு விஜய் பொறுப்பேற்பாரா? மாணவர்களை சந்தித்த விருது வழங்கிய நீங்கள் அந்த மேடையில் இந்த பாடலை ஒலிக்க செய்ய முடியுமா? இதை சினிமாவா பார்க்க முடியாது. இந்த பாடல் மூலம் ஒரு நபர் வீணானாலும் அதற்கு விஜய் தான் காரணம். இந்த பாடலுக்கு எதிராக வழக்கு தொடர போகிறேன் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“