மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிப்பில் நேற்று வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல்நாளில் வசூல் நிலவரம் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள படம் பொன்னியின் செல்வன். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் 2 பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் முதல்பாகம் பெரும் வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துது. இதனைத் தொடர்ந்து பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் படத்தின் 2-ம் பாகம் நேற்று (ஏப்ரல் 28) வெளியானது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள பொன்னியின் செல்வன் 2 படம் இந்தியாவில் முதல் நாளில் ரூ.32 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இண்டஸ்ட்ரி டிராக்கர் சாக்னில்க் கருத்துப்படி, பொன்னியின் செல்வன் 2 வெளியான நாளில் 59.94% தமிழ், 10.20% இந்தி மற்றும் 33.23% மலையாள வசூலுடன் ரூ.32 கோடி வசூலித்துள்ளதாக தகவல் அளித்துள்ளது.. திரைப்பட வர்த்தக ஆய்வாளர் மனோபாலா விஜயபாலன், “TN BO இல் பொன்னியின் செல்வன் 2-க்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. இதன் மூலம் விஜயின் வாரிசு படத்தை இந்த படம் முந்தியுள்ளர்து.
இதனால் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் மாநிலத்தில் நடப்பு ஆண்டின் இரண்டாவது சிறந்த ஓப்பனிங்கைப் பெற்ற படமாகும். 2023 ஆம் ஆண்டிற்கான முதல் இடத்தை துனிவு பெற்றுள்ளது. தளபதி விஜய்யின் வாரிசு படம் இந்தியா முழுவதும் வெளியான முதல் நாளில் ரூ 26.5 கோடி வசூலித்தது.
ரமேஷ் பாலா, “பொன்னியின்செல்வன்2 அமெரிக்காவில் நம்பர் 3 இல் வியாழக்கிழமை முதல் 10 இடங்களில் வெளியானது (பிரிமியர்ஸ்)” என்று ட்வீட் செய்ததால், அமெரிக்காவிலும் நல்ல தொடக்கத்தைப் பெற்றதாகப் கூறியுள்ளார். மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கூட படம் நன்றாகத் திறக்கப்பட்டது என்றும் அவர் பகிர்ந்து கொண்டார். இதனிடையே பொன்னியின் செல்வன் 2 விமர்சனங்கள் பாசிட்டீவாக இருப்பதால் திரையரங்குகளில் வெற்றிகரமாக இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“