Advertisment

தணிக்கையில் 'யு' சான்று... 10 ஆயிரம் இலவச டிக்கெட் : ஆதிபுருஷ் ப்ரமோஷன் தீவிரம்

ஓம் ரவுத் இயக்கியயுள்ள ஆதிபுருஷ் திரைப்படம் வரும் ஜூன் 16-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்திற்கு யு சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Adipurush

ஆதிபுருஷ் படம்

பிரபாஸ் கீர்த்தி சனோன் நடிப்பில் ராமாயணத்தை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள ஆதிபுருஷ் திரைப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், படம் 3- மணிநேரம் ரன்னிங் டைம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

பாகுபலி நாயகன் பிரபாஸ் கடந்த சில ஆண்டுகளாக ஒரு பெரிய வெற்றிக்காக காத்திருக்கும் நிலையில், பாகுபலி படத்திற்கு பிறகு அவர் நடித்த சாஹோ, ராதே ஷியாம் உள்ளிட்ட படங்கள் வரவேற்பை பெற தவறிவிட்டன. ஆனாலும் தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் பிரபாஸ் நடிப்பில் தயாராகியுள்ள படம் ஆதிபுருஷ்.

ராமாயணத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடித்துள்ளார். ஓம்ராவத் இயக்கியுள்ள இந்த படம் வரும் ஜூன் 16-ந் தேதி வெளியாக உள்ளது. இதில் பிரபாஸ் கிங் ராகவாவாகவும், கிருதி சனோன் ராகவாவின் மனைவி ஜானகியாகவும், சன்னி சிங் லட்சுமணனாகவும் நடித்துள்ளனர்.

மேலும் இப்படத்தில் ராவணன் வேடத்தில் சைஃப் அலி கான் நடிக்க, ஹனுமானாக தேவதத்தா நாகே நடிக்கிறார். இன்று ஆதிபுருஷ் திரைப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில், படத்தின் ரன்னிங் டைம் தோராயமாக 3 மணி நேரம் (179 நிமிடங்கள்) என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தி காஷ்மீர் ஃபைல்ஸ் மற்றும் கார்த்திகேயா 2 போன்ற திரைப்படங்களை தயாரித்த திரைப்பட தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால், 10,000 க்கும் மேற்பட்ட ஆதிபுருஷ் படத்தின் டிக்கெட்டுகளை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும் தெலுங்கானா முழுவதும் உள்ள அரசு பள்ளிகள், அனாதை இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு டிக்கெட் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. .

இது குறித்து அபிஷேக் அகர்வால் கூறுகையில்,, “இந்த ஜூன் மாதத்தில், மிக உன்னதமான மரியதா புருஷோத்தமரை கொண்டாடுவோம். ஆதிபுருஷம் கொண்டாடுவோம். பகவான் ஸ்ரீ ராமரின் ஒவ்வொரு அத்தியாயமும் மனித குலத்திற்கு ஒரு பாடம். இந்தத் தலைமுறையினர் அவரைப் பற்றி அறிந்து, அவருடைய தெய்வீக அடிச்சுவடுகளைப் பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். திருப்பதியில் நடைபெற்ற படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவின் போது, அனுமனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒவ்வொரு திரையரங்கிலும் ஒரு இருக்கையை காலியாக வைக்குமாறு ஆதிபுருஷ் படத்தின் தயாரிப்பாளர்களிடம் இயக்குனர் ஓம் ராவத் கேட்டுக் கொண்டார்.

இது குறித்து அவர் கூறுகையில்,“எனது அம்மா சொல்கிறார், ஒவ்வொரு முறை ராமாயணம் திரையிடப்படும்போதும்  அனுமன் ஜி அதைப் பார்க்க வருவார். எனவே, பூஷன் சார், அனில் ஐயா அவர்களுக்கு எனது வேண்டுகோள், நமது அனுமன் ஜிக்கு, ஒவ்வொரு ஆதிபுருஷ் வெளியாகும் தியேட்டர்களில், ஒரு இருக்கையை காலியாக வைக்க வேண்டும். உலகில் எங்கும், எங்கு ஆதிபுருஷ நிகழ்ச்சி நடந்தாலும், ஹனுமான் ஜிக்கு ஒரு இருக்கையை வைக்குமாறு தயாரிப்பாளரையும் விநியோகஸ்தரையும் கேட்டுக்கொள்கிறேன், அவர் ராமாயணத்தைப் பார்க்க வருவார், ”என்று ராவத் கூறியுள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Prabhas
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment