/indian-express-tamil/media/media_files/actor-bala-surprice.jpg)
நடிகர் பாலா
பெட்ரோல் பங்கில் பணியாற்றிய ஊழியருக்கு இருசக்கர வாகனத்தை பரிசாக வழங்கிய நகைச்சுவை நடிகர் பாலாவுக்கு புதுவையில் பள்ளி மாணவர் ஒருவர் தாமே உருவாக்கிய சிறிய அளவிலான இருசக்கர வாகனத்தை பரிசாக வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.
சின்னத் திரை வாயிலாக லட்சக்கணக்கானோர் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் பாலா. இவரது சமூகசேவை பணிகள் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் பெட்ரோல் பங்க்கில் வேலை பார்க்கும் இளைஞரின் வறுமையை உணர்ந்து அவருக்கு இருசக்கர வாகனத்தை பாலா பரிசாக வழங்கினார். இது அனைவராலும் பாராட்டப்பட்டது.
பாலாவின் இந்த மனிதநேயமிக்க செயலை பாராட்டும் வகையில் புதுச்சேரி சேலியமேடு கிராமத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் ஜெகதீஷ் என்ற மாணவன் பயனற்ற தேங்காய், குருமி, சோளக்கதிர், பனைப் பொருட்கள் மற்றும் தென்னை நார்,சுரக்காய் குடுவை போன்றவற்றைக் கொண்டு கலைநயம் மிக்க வகையில் பாலா பரிசளித்த இருசக்கர வாகனத்தை தத்துரூபமாக உருவாக்கி இருந்தார்
இந்நிலையில் இன்று வில்லியனூர் ஆச்சாரியா கல்லூரி விழாவிற்கு வந்த நடிகர் பாலா மாணவன் ஜெகதீஷை அழைத்து பாராட்டி அவர் உருவாக்கிய கலை நயமிக்க இருசக்கர வாகனத்தை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார். மேலும் அந்த மாணவனை ஊக்குவிக்கும் வகையில் கட்டி தழுவி அவரை பாராட்டியது கல்லூரி விழாவில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாலா, இது போன்ற பரிசு பொருட்களை பெறுவதற்கு நான் தகுதியானவனா என்று தெரியவில்லை. இருப்பினும் தம்பி உருவாக்கிய பொம்மை இருசக்கர வாகனத்தை மகிழ்ச்சியுடன் பெற்று செல்கிறேன். இதுவரை பெரிதாக உதவி எதுவும் செய்யவில்லை. இன்னும் நிறைய செய்ய வேண்டும் என கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.