குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற பவித்ரா லட்சுமியின் அம்மா சமீபத்தில் மரணமடைந்த நிலையில், அவரை நேரில் வந்து பார்க்க முடியவில்லை என்று கூறி நடிகர் புகழ் மன்னிப்பு கோரியுள்ளார்.
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பவித்ரா லட்சுமி. விஜய் டிவியின் பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுள்ள இவர், ஏராளமாக ஆல்பம் பாடல்களில் நடித்துள்ளார். மேலும் நடிகர் சதீஷ் நாயகனாக நடித்த நாய் சேகர் படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் பவித்ரா லட்சுமி அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பவித்ரா லட்சுமி வெளியிட்ட ஒரு பதிவில், தனது தாய் இறந்து 7 நாட்கள் ஆகிறது என்று உருக்கமாக பதிவிட்டிருந்தார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவிய நிலையில், பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்திருந்தனர்.
இதனிடையே அம்மாவை நேரில் வந்து பார்க்க முடியவில்லை என்னை மன்னித்துவிடு என்று குக் வித் கோமாளி நடிகர் புகழ் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவில், பவி சாரி கடைசி வரைக்கும் அம்மாவை பார்க்க வரமுடியவில்லை. என்னை மன்னித்துவிடு. அம்மா எப்போவும் உன் கூடதான் இருப்பாங்க. உணக்காக நானும் ப்ரண்சும் சாகுர வரைக்கும் கூடவே இருப்போம்.
உனக்கு இந்த இழப்பு மிகவும் பெரியது. உன் உலகமே அம்மா மட்டும் தான் நீ நல்லா இருக்கனும் அதுதான் அம்மாவின் ஆசை என்று அழுகிற மாதிரியான எமோஜியை பதிவிட்டு தனது வருத்தத்தை பதிவிட்டுள்ளார். புகழ் மற்றும் பவித்ரா ஜோடியின் காமெடி குக் வித் கோமாளியில் நல்ல வரவேற்பை பெற்றது என்று சொல்லலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“