Advertisment

இந்தியாவுக்காக மகன் பெறும் பதக்கம் தான் என் வாழ்க்கை : பிறந்த நாளில் நடிகர் மாதவன் உருக்கம்

எனது சொந்த வாழ்க்கையில் நான் நான் என்ன செய்தேன் என்பதை விட எனது மகன் நாட்டிற்காக கொண்டுவரும் பெருமை எனக்கு மிகவும் முக்கியம்

author-image
WebDesk
Jun 01, 2023 22:43 IST
Madhavan Family

மாதவன் மனைவி சரிதா மற்றும் மகன் வேதாந்த் உடன்

தனது 53-வது வயதில் அடியெடுத்து வைக்கும் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமான மாதவன், சினிமாவில் தான் வாங்கிய விருதுகளை விட இந்தியாவுக்காக தனது மகன் வாங்கிய பதக்கமே தனது வாழ்வில் மிகவும் பெரியது என்று கூறியுள்ளார்.

Advertisment

2000-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே படத்தின் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமான மாதவன் தொடர்ந்து பல இயக்குனர்களுடன் பணியாற்றி பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். 23 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் மாதவன் இன்று தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், தனக்கு 53 வயதானாலும் தான் இன்னும் அறிமுக நடிகராவே தன்னை உணர்வதாக தெரிவித்துள்ள மாதவன், சினிமாவில் தான் பல விருதுகள் வாங்கினாலும் தனது மகன் வேதாந்த் இந்தியாவுக்காக வாங்கும் பதங்கள் எனது வாழ்க்கையின் அதிக முக்கியத்துவம் என்று கூறியுள்ளார்.

மாதவனின் மகன் வேதாந்த் தேசிய அளவிலான நீச்சல் வீரர் என்பதும், ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருவதும் பலரும் அறிந்த ஒன்று. இது குறித்து பேசிய மாதவன், தனது மகனும் மனைவியும் கடவுள் தனக்கு கொடுத்த மிக்பெரிய ஆசீர்வாதம். கடவுள் நம் வாழ்வில் இருப்பதற்காக ஒவ்வொரு நாளும் நாம் அவருக்கு நன்றி செலுத்துகிறோம். அதேபோல் எனது சொந்த வாழ்க்கையில் நான் நான் என்ன செய்தேன் என்பதை விட எனது மகன் நாட்டிற்காக கொண்டுவரும் பெருமை எனக்கு மிகவும் முக்கியம் என்று கூறியுள்ளார்.

மாதவனின் மகன் வேதாந்த், கடந்த மாதம், 58வது MILO/MAS மலேசியா இன்விடேஷனல் ஏஜ் குரூப் நீச்சல் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று, இந்தியாவுக்காக 5 தங்கம் வென்றார். இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டிருந்த மாதவன், “கடவுளின் கிருபையுடனும், உங்கள் நல்வாழ்த்துக்களுடனும், 2023 ஆம் ஆண்டு இந்த வார இறுதியில் நடைபெற்ற மலேசிய வெல்கம் ஏஜ் பிரிவு சாம்பியன்ஷிப் போட்டியில் வேதாந்த் இந்தியாவுக்காக 5 தங்கப்பதங்கங்களை (50 மீ, 100 மீ, 200 மீ, 400 மீ மற்றும் 1500 மீ) பெற்றுளளார். இது மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது என்று பதிவிட்டிருந்தார். இந்த இளம் நீச்சல் சாம்பியன் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல வெற்றிகளைப் பெற்றுள்ளார்.

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் இருந்தபோது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மும்பையில் உள்ள பெரிய நீச்சல் குளங்கள் மூடப்பட்டது. இதனால் நாங்கள் இங்கு துபாயில் வேதாந்துடன் இருந்தோம். அங்கு இருந்த பெரிய குளங்கள் அவரது பயிற்சிக்கு வசதியாக இருந்தத, தற்போது வேதாந்த் ஒலிம்பிக்கை நோக்கி பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.  சரிதாவும் (மாதவன் மனைவி) நானும் அவருக்குப் பக்கபலமாக இருக்கிறோம், ”என்று மாதவன் கூறினார்.

மேலும் மகன் சினிமாவில் நடிப்பது குறித்து பேசிய மாதவன், பெற்றோர்களாகிய நாங்கள் எப்போதும் தங்கள் குழந்தை வாழ்க்கையில் என்ன செய்ய விரும்புகிறாரோ அதையே செய்ய  வேண்டும் என்று நினைக்கிறோம் "அவர் உலகம் முழுவதும் நீச்சல் சாம்பியன்ஷிப்களை வென்று எங்களை மிகவும் பெருமைப்படுத்துகிறார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும். வேதாந்த் நடிகராக வேண்டாம் என்று தேர்வு செய்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை "எனது சொந்த வாழ்க்கையை விட அவர் தேர்ந்தெடுத்த தொழில் எனக்கு மிகவும் முக்கியமானது," என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Madhavan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment