ரஜினிகாந்த் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ள ஜெயிலர் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இந்த படத்தை பார்க்க ஜப்பானில் இருந்து ஒரு ஜோடி சென்னைக்கு வந்துள்ளனர்.
அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், வெளியாகியுள்ள படம் ஜெயிலர் நெல்சன் திலீப் குமார் இயக்கததில் தயாராகியுள்ள இந்த படத்தில் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சன்பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சுந்திர தினத்தை முன்னட்டு இன்று வெளியாகியுள்ள ஜெயிலர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனிடையே ஜெயிலர் படம் வெளியான திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வரும் நிலையில், ஜப்பானில் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத் தலைவியான யசுதா ஹிடெடோஷி தனது துணையுடன் ஜெயிலர் படம் பார்ப்பதற்காக சென்னை வந்துள்ளார். இது தொடர்பான வெளியாகியுள்ள ஒரு வீடியோ பதிவில், "ஜெயிலர் படத்தைப் பார்க்க, ஜப்பானில் இருந்து சென்னை வந்துள்ளோம். சூப்பர் ஸ்டாரின் 169வது படத்தைப் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று ஹிடெடோஷி தமிழில் பேசுகிறார்.
மேலும், படத்தின் ஒன் லைனரான "ஹுக்கும்-டைகர் கா ஹுக்கும்" (புலியின் உத்தரவு) என்ற பிரபலமான டயலாக்கை அவர் வாய்விட்டுப் பேசியுள்ளார். ரஜினிகாந்தினால் தமிழ் கற்கும் ரசிகர்களைக் கொண்ட ஜப்பானில் ஜெயிலர் திரைப்படம் இந்த முறை மிகக் குறைவாகவே வெளியிடப்பட்டதாகவும், அதனால் அனைத்து காட்சிகளும் குறைவாக இருப்பதாகவும் அச்சிலஸ் (@Searching4ligh1) என்ற ட்விட்டர் பயனர் ட்வீட் செய்துள்ளார். ஏற்கனவே முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரும், திரைப்பட விநியோகஸ்தருமான திருப்பூர் சுப்ரமணியம் "இது ரஜினிகாந்த் படம், நிச்சயமாக, விமர்சையாக கொண்டாடப்படும். முன்பு போல் எங்களுக்கு ரசிகர்கள் ஷோக்கள் இல்லை, ஆனால் ரசிகர்களின் உற்சாகத்தை குறைக்கவில்லை.தமிழகம் முழுவதும் 900 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்படுகிறது. மறுபுறம், பிவிஆர் சினிமாஸ் நாடு முழுவதும் உள்ள தனது திரையரங்குகளில் ஏற்கனவே 1.3 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
புக்மைஷோவின் சிஓஓ-சினிமாஸ் ஆஷிஷ் சக்சேனா கூறுகையில், ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை உள்ளடக்கிய வரவிருக்கும் நீண்ட வார இறுதியில், ஜெயிலர் இதுவரை தங்கள் ஆப்பில் கிட்டத்தட்ட 900,000 டிக்கெட்டுகளை விற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“