scorecardresearch

ஐஸ்வர்யா ராய்க்கே டஃப் கொடுப்போம் தெரியுமா? சிவாங்கியின் ஷூட்டிங் ஸ்பாட் நடனம்

Shivangi Viral Dance : குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற சிவாங்கி தற்போது ஐஸ்வர்யா ராய் பாடலுக்கு நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா ராய்க்கே டஃப் கொடுப்போம் தெரியுமா? சிவாங்கியின் ஷூட்டிங் ஸ்பாட் நடனம்

Cook With Comali Shivangi Dance To Aishwarya Rai Song : சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற நடிகை சிவாங்கி தற்போது ஐஸ்வர்யா ராய் பாடலுக்கு நடனமாடியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடல் பாடி தனது இனிமையான குரலின் மூலம் முத்திரை பதித்தவர் சிவாங்கி. அந்த நிகழ்ச்சியிலேயே தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய அவர் தனது நகைச்சுவை பேச்சின் மூலம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக சிறப்பாக நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிகழ்ச்சியில் புகழுடன் இவர் சேர்ந்து செய்யும் அட்ராசிட்டிகள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது குக் வித் கோமாளி சீசன் 2 முடிந்து சீசன் 3 விரைவில் தொடங்க உள்ள நிலையில், இந்நிழ்ச்சி எப்போது தொடங்கும் என்று ரசிகர்களுடன் தானும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பதாக கூறும் சிவாங்கிக்கு, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் சிவகார்த்திகேயனுடன் டான், உதயநிதி ஸ்டாலினுடன் ஆர்டிகள் 15 ஆகிய படங்களிலவ் நடித்து வருகிறார். மேலும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது சிவாங்கி வெளியிட்டுள்ள ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஐஸ்வர்யா ராய் போலவே, அச்சு அசலான மற்றும் அற்புதமான நடனத்தால் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். சிவாங்கி. ஐஸ்வர்யா ராய் பச்சன் நடித்த குரு படத்தில் இடம்பெற்ற ‘நன்னாரே’ பாடலும், அதில் ஐஸ்வர்யா ராயின் நடனமும் அந்த படம் வெளியான போது பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த நிலையில், தற்போது சிவாங்கியின் நடனமும் ரசிகர்களை திளைக்க வைத்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil reality cwc shivangi dance to aishwarya rai nannare song viral

Best of Express