Tamil Cook With Comali : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் திடீர் தோன்றிய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் போடடியாளர்களை கலாய்த்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் விஜய் டிவி ஷோக்களுக்கு இளைஞர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமான ரியாலிட்டி ஷோ குக் வித் கோமாளி. சமையல் கலை + கோமாளிதனம் இரண்டையும் கலந்து கொடுக்கும் இந்த நிகழ்ச்சி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது என்றே சொல்லாம்.
கடந்த 2019-ம் ஆண்டு ஒளிபரப்பான இந்த நிகச்சியின் முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் இருந்து இந்த நிகழ்ச்சியின் 2-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை விட இரண்டாவது சீசன் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் விஜய்டிவியின் முன்னணி ஷோக்களில் குக் வித் கோமாளிக்கு கண்டிப்பாக முதலிடம் தான்.
விஜய் டிவியில் ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியையே குக் வித் கோமாளி வீழ்த்திவிட்டது என்றே சொல்ல்லாம். ரசிகர்கள் அதிகமாக விரும்பி பார்க்கும் இந்த நிகழ்ச்சிக்கு விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. இதில் இறுதி போட்டிக்கு ஏற்கனவே கனி, பாபா பாஸ்கர், அஸ்வின் ஆகிய மூன்று பேர் தேர்வான நிலையில், வைல்டு கார்டு போட்டியில் ஷகீலா, பவித்ரா ஆகிய இருவரும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.
Advertisment
Advertisements
இந்த சீசனில் இறுதிப்போட்டியில் யார் வெற்றிபெறுவார்கள் என்று மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் கனி முதல் இடத்தையும், ஷகீலா இரண்டாம் இடத்தையும், அஷ்வின் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த இறுதிப்போட்டியில், சிறப்பு விருந்தினராக நடிகர் சிம்பு கலந்துகொண்டார். சிம்புவை தொடர்ந்து தற்போது இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக முகன், பாடகி தீ, அறிவு, சந்தோஷ் நாராயணன் என்று பலர் வந்துள்ளனர்.
அதே போல வீடியோ மூலம் குக்கு வித் கோமாளி டீமிற்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் திடீர் விசிட் அடித்துள்ளார். அப்போது கனியை ‘என்ன பைனஸ்ல்ல கூட காரக் கொளம்பு தானா’ என்று பங்கம் செய்துள்ளார். அதே போல தங்கதுரை ஜோக் சொல்ல முற்பட்ட போது பாய் சொல்லி அவரையும் கலாய்த்துள்ளார் ரஹ்மான். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil