விஜய் டிவி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான நடிகர் பாலா தற்போது திரைப்படங்களிலும் நடித்து வரும் நிலையில், தனது நீண்ட நாள் காதலியை நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
Advertisment
விஜய்’ டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் கே.பி.ஒய்.பாலா. தொடர்ந்து விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இவர், புலிக்குத்தி பாண்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். மேலும் சமூக ஆர்வலராக தன்னை தேடி வரும் பலருக்கும் உதவி செய்யும் பாலா, மலை கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வழங்கி உதவியுள்ளார்.
தற்போது நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் மாறியுள்ள பாலா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் பங்கேற்று அசத்தியிருந்தார். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களின் பட்டியலில் இருக்கும் பாலா, சமீபத்தில் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பலருக்கும் உதவி செய்துள்ளார். மேலும் தனது வருமானத்தில் பெரும்பகுதியை மக்கள் நலனுக்காக செலவிடும் பாலா, பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
திருமண வயதை எட்டியுள்ள பாலா எப்போது திருமணம் செய்துகொள்வார் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ள நிலையில், விஜய் டிவியின் முத்தழகு சீரியலில் நடித்து வரும் நடிகை ஷோபனாவை பாலா காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது. இதனிடையே தற்போது பாலா ஒரு ப்ரமோஷன் வீடியோவில் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
Advertisment
Advertisements
ஏஞ்சலினா என்று இந்த வீடியோவில் கூறியுள்ள நிலையில், இந்த வீடியோ பதிவு இணைதயத்தில் வைரலாகி வருகிறது. அதே சமயம் இது விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட வீடியோவா அல்லது, பாலா உண்மையில் அவருக்கு ப்ரபோசலை கூறினாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news