scorecardresearch

ஹீரோயின் களை வந்தாச்சு… ஷிவாங்கி போட்டோஷூட்!

கோமாளியாக கலக்கிய சிவாங்கி அடுத்து பாடகி நடிகை என தனது திறமைகளை வளர்த்துக்கொண்டார்.

பல திறமையாளர்களை வெளியுலகிற்கு அறிமுகம் செய்த பெருமை பெற்ற விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சிவாங்கி. இந்த நிகழ்ச்சியில் இவர் பாடும் பாடலுக்கென்று தனியாக ரசிகர்கள் பட்டாளம் இருந்தது.

பாடல் மட்டுமல்லாது காமெடியும் எனக்கு வரும் என்பதை நிரூபிக்கும் வகையில் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் புகழுடன் இவர் செய்யும் சேட்டைகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், நிகழ்ச்சி முடிந்த பிறகு இவர்களது காமெடி சேட்டைகளை பலர் கண்டு ரசித்து வருகின்றனர்.

கோமாளியாக கலக்கிய சிவாங்கி அடுத்து பாடகி நடிகை என தனது திறமைகளை வளர்த்துக்கொண்டார். இதில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து நடிப்பிலும் முத்திரை பதித்திருந்தார்.

மேலும், தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளி, பின்னணி பாடகி, வளர்ந்து வரும் நடிகை என பல கோணங்களில் பிஸியாக இருந்து வரும் சிவாங்கி சமூகவலைதளங்களிலும் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

தனியாக யூடியூப் சேனல் நடத்தி வரும் இவர், அவ்வப்போது வீடியோக்களையும். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் முன்னணி ஹீரோயின்களுக்கு சவால் விடும் அளவிற்கு சிவாங்கி அசத்தியுள்ளதாக கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil reality show actress shivangi photos going on viral