கன்னித்தீவு பொண்ணா... கட்டெறும்பு கண்ணா..!' இந்த பிக் பாஸ் பிரபலத்தை கண்டுபிடிங்க பாஸ்!
தற்போது நடைபெற்று வரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பிக்பாஸ் 5-வது சீசனில் பங்கேற்ற ராஜூ, பிரியங்கா, பாவனி. அமீர் உள்ளிட்ட பலரும் பங்கேற்று வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்களை வைத்து நடத்தப்படும் டான்ஸ் ஷோவான பிபி.ஜோடிகள் நிகழ்ச்சியின் தற்போதைய ப்ரமோ இணையத்தி்ல் வைரலாகி வருகிறது.
Advertisment
சீரியல் என்றாலும் ரியாலிட்டி ஷோ என்றாலும் பரபரப்பு விறுவிறுப்புடன் கொடுக்கும் விஜய் டிவியின் பி.பி.ஜோடிகள் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்களை வைத்து நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில், வித்தியாசமாக நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பிக்பாஸ் 5-வது சீசனில் பங்கேற்ற ராஜூ, பிரியங்கா, பாவனி. அமீர் உள்ளிட்ட பலரும் பங்கேற்று வருகின்றனர். இதில் கடந்த சில தினங்களாக அமீர் பாவனி ஜோடியின் லவ் ப்ரபோஸ், மற்றும் அவர்களின் நடனம் வைரலாக பரவியது.
இதன் காரணமாக பி.பி.ஜோடிகள் நிகழ்ச்சியின் பார்வையாளர்களி எண்ணிக்கையும் அதிகரித்து வந்த நிலையில், தற்போது மேலும் ரசிகர்கள் பட்டாளத்தை அதிகரிக்கும் வகையில், பிக்பாஸ் சாம்பியன் ராஜூ புது அவதாரம் எடுத்துள்ளார். இது தொடர்பாக வெளியாகியுள்ள ப்ரமோ வைலாகி வருகிறது.
இதில் நாடாமை வேடத்தில் வரும் பிரியங்கா, இங்க நிறைய தப்பு இருக்கிறது. அதை சரி செய்ய நான் தீர்ப்பு சொல்ல போகிறேன். ஆனால் நான் தீர்ப்பு சொல்ல வேண்டும் என்றால் என் மனைவி கூட இருக்க வேண்டும். என் மனைவியை கூப்பிடுங்கடா என்று சொல்கிறார்.
அதனைத் தொடர்ந்து ராஜூ லேடி கெட்டப்பில் யுத்தம் செய் படத்தில் இடம் பெற்ற கன்னித்தீவு பொண்ணா என்ற பாடலுக்கு அசத்தலாக நடனமாடுகிறார். இந்த கெட்டப்பை பார்த்த நடுவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், ராஜூவுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகினறனர். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ராஜூ அழகோ அழகு என்று கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“