BB Jodigal Show Vanitha Exit Update : கடந்த 1995-ம் ஆண்டு விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தின் மூலம் அறிமுகமானவர் வனிதா. பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகளான இவர், அதன்பிறகு ஒரு சில படங்களில் நாயகியாக நடித்ததை தொடர்ந்து திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த அவர், கணவரை விவகாரத்து செய்து விட்டு 2-வது திருமணம் செய்துகொண்டார். இதனால் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்த இவர் ஒரு கட்டத்தில், 2-வது கணவரையும் விவாகரத்து செய்தார்.
இதனையடுத்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்த இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானார். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிரபலங்களை வைத்து விஜய் டிவியில் நடைபெற்று வரும் பிபி ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் வனிதா பங்கேற்று வந்தார். கடந்த சீசனில் தனியாக பங்கேற்ற இவர், தற்போது சுரேஷ் சக்ரவர்த்தியின் ஜோடியாக கலந்துகொண்டார். முதல் நாளில் இவாது நடனம் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் அடுத்த நாளில் திடீரென வனிதா பிபி ஜோடிகள்நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்ட அவர், ஒரு பெண் தான் இன்னோரு பெண்ணுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். ஆனால் , அவர்களை வயதில் மூத்தவர்கள் என்பதால் அவர்கள் கடந்து வந்த பாதையை மறந்து விட்டார்கள் என்று கூறி இருந்தார். இதன் மூலம் வனிதாவுக்கும் இந்த நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வரும் ரம்யா கிருஷ்ணனுக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாகவே வனிதா நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டதாக தகவல் வெளியாகது. பின்னாளில் இதுகுறித்து வெளியான பரமோ வீடியோவும அதனை உறுதிபடுத்தியது.
இந்நிலையில் சமீபத்தில் இந்த நிகழ்ச்சி குறித்து மீண்டும் ஒரு ப்ரோமோ விடியோ வெளியாகியுள்ளது. இதில் நகுல் மற்றும் ரம்யா கிருஷ்ணன் இருவரும் வனிதாவிற்கு மார்க் போட்ட பிறகு, உங்க ரெண்டு பேர்ட்டயும் சொல்றேன், மத்தவங்க கூட கம்பேர் பண்ணாதீங்க என்று வனிதா நடுவர்களுக்கே அட்வைஸ் செய்துள்ளார். இதனால் கடுப்பான ரம்யா கிருஷ்ணன் போட்டியில் கம்பேர் செய்யாமல் எப்படி மார்க் போட முடியும் என்று கூற, கடுப்பான வனிதா செட்டை விட்டு வனிதா வெளியேறியுள்ளார். அப்போது ரம்யா கிருஷ்ணன் கை தட்டிவிட்டு பாகுபலி ராஜமாதாவை போல படு கெத்தாக போஸ் கொடுக்கிறார். இந்த ப்ரமோ தற்போது வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil