Tamil Biggboss 5th Season Contestants Update : இந்தியாவில் முதன் முதலாக இந்தியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து தென்னிந்தியாவில், தமிழ் தெலுங்கு மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்தியை போல இங்கேயும் இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இதில் மலையாளம் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளில் 3 வது சீசன் முடிந்துள்ள நிலையில், தமிழில் 4-வது சீசன் முடிந்து விரைவில் 5-வது சீசன் தொடங்கவுள்ளது.
தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது கொரோனா தொற்று காரணமாக 5-வது சீசன் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் இந்த சீசனுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்புகள் வந்தாலும், பிக்பாஸ் வீட்டில் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளுக்காகவே ரசிகர்கள் இந்நிகழ்ச்சியை விரும்பி பார்க்கின்றனர். மேலும் இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் அதன்பிறகு திரைத்துறையில் வாய்ப்புகள் பெற்று வருகின்றனர். இதனால் பிரபலங்கள் பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ஐந்தாவது சீசன் வெகு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இதற்கான செட் அமைக்கும் பணிகள் பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க மற்றொருபுறம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கான தேர்வு நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி இந்நிகழ்ச்சியில், இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவியை சார்ந்த பிரபலங்கள் கனி, சுனிதா, அசிம், சிவாங்கி, தர்ஷா குப்தா, ஆகியோரிடமும், விஜய் டிவி தொடர்பு இல்லாத வகையில், நடிகர் ராதாரவி, நடிகை ராதா, பூணம் பாஜ்வா, நகுல் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் நடிகர் நகுல் இதற்கு பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இதனால் அவர் கண்டிப்பாக இடம்பெற அதிகவாய்ப்புகள் இதுப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதில் உண்மையில் யார் யார் போட்டியாளர்களாக கலந்துகொள்வார்கள் என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil