பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் நாளுக்கு நாள் பரபரப்பான திருப்பங்களுடன் நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த காதல் சம்பவம் தற்போது அரங்கேறும் நிலையில் உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கியது. 18 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் அனன்யா ராவ் வெளியேற்றப்பட்ட நிலையில், எழுத்தாளரும் நடிகருமான பவா செல்லதுரை போட்டியில் இருந்து விலகுவதாக கூறி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார். இதனால் தற்போது நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் மட்டுமே விளையாடி வருகின்றனர்.
வழக்கத்திற்கு மாறாக 2 வீடுகள் 2 நாமினேஷன்கள் என வித்தியாசமாக சென்றுகொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் டாஸ்கில் பங்கேற்பதும், ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் அவருக்ளுக்கு சமைத்து கொடுப்பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. இந்த இரு வீட்டுக்குள் இருக்கும் நபர்கள் அனைவருடனும் தொடர்பில் இருப்பது கேப்டன் மட்டுமே.
அந்த வகையில் இந்த வார கேப்டனாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சரவண விக்ரம், இரு வீடுகளுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார். அனைவருமே அவரை ஏளனம் செய்யும் விதமாக கேள்வி கேட்டு நச்சரித்து வருகின்றனர். சமைப்பதில் இரு வீட்டுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து கேப்டனாக சரவண விக்ரம் இரு வீட்டில் உள்ள ஹவுஸ்மெட்ஸ்-களிடம் சமாதானம் பேசுகிறார். அதன்பிறகு இரு வீடுகளும் சமாதானமாகியுள்ளது.
இதன்பிறகு மாயா அபர்னா இருவரும் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது அபர்னா எனக்கு ஒருவர் மேல் க்ரஷ் இருக்கிறது ஆனால் அவன் வேறு யாருடனாவது ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறானோனு தோணுது என்று சொல்ல, அப்போ உனக்கு அவனை பிடிச்சிருக்கா என்று மாயா கேட்கிறார். அப்படி சொல்ல முடியாது 18-பேரில் அவன் எனக்கு ஓகே என்று அபர்னா சொல்கிறார்.
இதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 3-வது காதல் ஜோடி தயாராகியுள்ளது. முதலில் ரவீனா மற்றும் மணி 2-வது மாயா மற்றும் விஜய், 3-வது தற்போது சரவண விக்ரம் மற்றும் அபர்னா ஜோடி உருவாகியுள்ளது. வழக்கமாக பிக்பாஸ் வீட்டில் அனைத்து சீசன்களிலும் காதல் ஜோடிகள் வருவது வழக்கமாக இருந்தாலும் இந்த முறை தொடக்கத்திலேயே 3 ஜோடிகள் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“