உன்ன அழிக்கிறதே இவங்கதான்... உண்மையை உடைத்த விசித்ரா : ஜோவிகா ரியாக்ஷன்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக பிக்பாஸ் மற்றும் ஸ்மால்பாஸ் வீட்டார்களுக்கு இடையே பெரும் மோதல் ஏற்பட்டு வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக பிக்பாஸ் மற்றும் ஸ்மால்பாஸ் வீட்டார்களுக்கு இடையே பெரும் மோதல் ஏற்பட்டு வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் களேபரங்கள் கலைக்கட்டி வரும் நிலையில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வெளியேற்றப்பட்ட பிரதீப்பை விட தற்போது பிக்பாஸ் வீட்டில் உள்ள பலரும் சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்துள்ளது தெரியவந்துள்ளது.
Advertisment
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக பிக்பாஸ் மற்றும் ஸ்மால்பாஸ் வீட்டார்களுக்கு இடையே பெரும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே இன்றைய எபிசோட்டுக்கான முதல் ப்ரமோ, வெளியாகியுள்ளது. இதில், கடந்த வாரம் ஸ்மால்பாஸ் வீட்டில் இருந்தவர்கள் பேசிய வார்தைகளை படம் பிடித்து காட்டி யார் பேசியதோ அதற்கு அவதே விளக்கம் கொடுக்க வேண்டும் என்று பிக்பாஸ் கூறிவிட்டார்.
முதலில் விணுஷா வேலைக்காரி என்று கூறி அவரை பற்றி பாடிஷேமிங் செய்ததாக நிக்சன் சிக்கினார். இதனால் மற்ற போட்டியாளர்கள் அவரை ஒரு மாதிரியாக பார்த்த நிலையில், விணுஷாவுக்காக நாங்கள் கேட்போம் என்று விசித்ரா சொல்கிறார். அதஙற்கு நிக்சன், நான் அதை மீன் பண்ணி சொல்லவில்லை நீங்கள் அப்படி மூஞ்ச வச்சிட்டு இருந்தீங்கனா செம்ம டென்சனாகும். சத்தியமாக நான் தப்பா மீன் பண்ணல அப்படி நீங்கள் நினைத்திருந்தார் சாரி என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் இதற்கு பிரதீப் எவ்வளவோ பரவாயில்லை. ஆண் போட்டியாளர்களை கண்டபடி பேசியிருந்தாலும் பெண்களிடம் அவர் மரியாதையாகத்தான் நடந்துகொண்டார் அவர்களை விமர்சித்தது இல்லை என்று கூறி வருகின்றனர்.
Advertisment
Advertisements
தொடர்ந்து 2-வது ப்ரமோவில், ஜோவிகா தினேஷை ஆம்பிளையா என்று கேட்டது குறித்து விளக்கம் கொடுத்தார். இதில், பிரதீப்-க்கு எதிரா ஏன் ரெட் கார்டு தூக்கவில்லை என்பதற்காக நான் கேட்டேன் என்று கூறினார். அதன்பிறகு அர்ச்சனாவை பூர்ணிமா வேலைக்காரி என்று கூறியதும், மாயா ஆர்.ஜே பிராவோ தன்னை கீழிருந்து மேலே பார்க்கிறான் என்று கூறியதும் வருகிறது. இதற்கு பிராவோ நான் எப்போ உங்களை அப்படி பார்த்தேன் என்று கேட்கிறார்.
இதற்கு ஐஷூ நாங்கள் இதை ஃபன்னாதான் சொன்னோம் என்று சொல்ல, அதற்கு தினேஷ் கீழிருந்து மேலே ஸ்கேன் பண்றாங்க அப்படினா வரவங்க எல்லாம் உங்களை அப்படித்தான் பார்க்கிறானா என்று கேட்கிறார். அதற்கு மாயா நீங்க கேரக்டர் அசம்ஸ் பண்றதெல்லாம் பண்ணாதீங்க என்று சொல்ல, அசம்ஸ் இப்ப யாருங்க பண்ணிருக்க என்று தினேஷ் கேட்க அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது.
தொடர்ந்து வெளியாகியுள்ள 3-வது ப்ரமோவில், ஜோவிகா இப்படியே நடந்துகொண்டால் அவரின் எதிர்காலம் வீணாகிவிடும் என்று அர்ச்சனா கூறியதும், ஜோவிகாவை, ஐஷு, மாயா, பூர்ணிமா ஆகியோர் ஏற்றிவிடுவதாக கூறிய வார்த்தைகள் இடம் பெற்றது. இதற்கு விசித்ரா உண்மைதான் என்று ஒப்புக்கொண்டாலும், ஜோவிகா சரி உட்காருங்க உங்கள்ட கேட்க எதுவும் இல்லை என்று தலைகணத்துடன் பதில் சொன்னார்.
கடந்த வாரம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பிரதீப்பை வெளியில் அனுப்பிய தொகுப்பாளர் கமல்ஹாசன் இந்த வாரம் மற்ற போட்டியாளர்கள் செய்துள்ள இந்த விஷயங்களை கருத்தில் எடுத்துக்கொண்டு நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“