Advertisment

Tamil Biggboss 7 Promo : முட்டிக்கொள்ளும் தினேஷ் - அர்ச்சனா... கிச்சனை தாண்டும் விசித்ரா

பிக்பாஸ் டேலன்ட் ஷோவில் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் பங்கேற்ற அவர்களுக்கு நடுவர்களாக ஸ்மால்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் வந்தனர்.

author-image
WebDesk
New Update
Biggboss promo 12.

பிக்பாஸ் ப்ரமோ நவம்பர் 02

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஏற்கனவே இருந்த போட்டியாளர்களும், வைல்ட் கார்டு என்டரியாக வந்த போட்டியாளர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.

Advertisment

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கியது. வழக்கத்திற்கு மாறாக 2 வீடுகள் 2 நாமினேஷன்கள் என புதிய விதிகளுடன் தொடங்கப்பட்ட இந்நிக்ழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் முதல் வாரத்தில் அனன்யா ராவ் வெளியேற்றப்பட்ட நிலையில்அடுத்த இரு தினங்களில் பவா செல்லதுரை தானாக வெளியேறியதால் 2-வது வாரத்தில் எலிமினேஷன் இல்லை.

தொடர்ந்து கடந்த வாரம் முதல் வாரத்தின் கேப்டன் விஜய் வர்மா எலிமினேட் செய்யப்பட்டார். இதனால் 15 போட்டியாளர்கள் பங்கேற்று வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அக்டோபர் 29-ந் தேதி வைல்ட் கார்டு என்ட்ரியாக நடிகர் தினேஷ்விஜே அர்ச்சனாகானா பாலா, அன்னபாரதி, ஆர்.ஜே.பிராவோ ஆகிய 5 பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். தற்போது இவர்கள் அனைவரும் ஸ்மால்பாஸ் வீட்டில் உள்ளனர்.

இதனிடையே நேற்று நடைபெற்ற பிக்பாஸ் டேலன்ட் ஷோவில் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் பங்கேற்ற அவர்களுக்கு நடுவர்களாக ஸ்மால்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் வந்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது சந்துல பொந்துல மாட்டிக்காத என்ற புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 10 ஃபிரேம்கள் வைக்கப்பட்டுள்ளது. இதில் புகுந்து வெளியில் வருபவது தான் டாஸ்க். இதில் சில போட்டியாளர்கள் உள்ளே புகுந்து வந்துவிட்டனர்.

இதில் ஒரு போட்டியளர் .பிரேமை உடைத்துவிட்டு வெளியில் வருகிறார். இது சரியில்லை என்று அர்ச்சனா சொல்ல, விசித்ரா இதற்கு சப்போர் செய்வதால் அர்ச்சனா விசித்ரா ட்விஸ் செய்கிறீர்களாக என்று கேட்கிறார். அதேபோல் தினேஷூம் அப்போ விட்டு இப்போ கேக்குறீங்களே என்று கேட்கிறார். அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Bigg Boss Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment