அர்ச்சனாவை டார்கெட் செய்யும் ஹவுஸ்மெட்ஸ்... ஆதரவாக வாதாடும் விசித்ரா : பிக்பாஸ் மோதல்
பிரதீப்-க்கு ஆதரவாக விசித்ரா அர்ச்சனா மற்றும் அவருக்கு எதிராக மாயா, பூர்ணிமா, ஐஷூ ஆகியோர் இருப்பதால் இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் பல களேபரங்கள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது ஒருவர் மற்றொருவர் மீது வழக்கு தொடுக்கும் வகையில் பி.பி.கோர்ட் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது.
Advertisment
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கப்பட்டது. 5 வாரங்களை கடந்துள்ள இந்நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஒரே நாளில் 5 வைல்டு கார்டு போட்டியாளர்கள் வீட்டிற்கு வந்தனர். அன்றில் இருந்து பிக்பாஸ் vs ஸ்மால் பாஸ் என இரு வீட்டாருக்கும் இடையே மோதல் வெடித்து வருகிறது.
இதனிடையே கடந்த வாரம் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட பிரதீப்-க்கு ஆதரவாக விசித்ரா அர்ச்சனா மற்றும் அவருக்கு எதிராக மாயா, பூர்ணிமா, ஐஷூ ஆகியோர் இருப்பதால் இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது. இதில் நேற்று டூத் பிரஷ் கொடுப்பதில் ஏற்பட்ட பிரச்சனையால் பிக்பாஸ் வீடு ரணகளமானது.
அதனைத் தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டில் ஒருவர் பற்றி ஒருவர் பேசியது குறித்த ஸ்டேட்மெண்ட்கள் குறித்து அவர்களே விளக்கம் அளிக்க வேண்டும் என்று டாஸ்க் வழக்கப்பட்டது. இதில் நிக்சன் வினுஷா குறித்து பேசியதும், மாயா ஆர்.ஜே.பிராவோ குறித்து பேசியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு பிரதீப் எவ்வளவோ பரவாயில்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர்.
Advertisment
Advertisement
இதனிடையே தற்போது இன்றைய எபிசோட்டுக்கான முதல் ப்ரமோ வெளியாகியுள்ளது. இதில் பிபி கோர்ட் உருவாக்கப்பட்டு, ஒருவர் மற்றொருவர் மீது வழக்கு தொடரலாம் என்று கூறப்பட்டது. இதில் ஜட்ஜாக ரவீனா நியமிக்கப்பட்டுள்ளார். இதில் விசித்ரா கேப்டன்ஷிப் பதவியை மிஸ்யூஸ் பண்றாங்க என்று சொல்ல, கேப்டன் மாயா என் கேப்டன் வேலையை செய்ய விடமாட்ராங்க என்று புகார் கூறுகிறார். இதனைத் தொடர்ந்து கானா பாலா விசித்ரா மீதும், தினேஷ் கேப்டன் மாயா மீதும், ஜோவிகா அர்ச்சனாமீதும் வழக்கு தொடர்வதாக கூறியதை தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது.
தொடர்ந்து வெளியாகியுள்ள 2-வது ப்ரமோவில், கிச்சனில் ஏ.பி.சி.டி கூட தெரியாத அர்ச்சனாரொம்ப அக்ளியான ரிவேஞ்ச் கேம் சாப்பாட்டில் போய் விளையாடிட்டாங்க யுவர்ஹானர் என்று பூர்ணிமா சொல்ல, அர்ச்சனாகிட்ட பிரச்சனையா இல்ல அவங்களுக்கு சமையல் தெரியாதது தான் பிரச்சனையா என்று எனக்கு தெரியனும், இங்கு குக்கிங் தெரியலங்கிற பிரச்சனையே கிடையாது. நாங்கள் எதற்காக உங்களை பழிவாங்கனும் என்று விசித்ரா கேட்க, இரு வீட்டாருக்கும் இடையே மோதல் முற்றுகிறது.
இறுதியாக இவர்கள் என் வீட்டில் இருக்கும் அர்ச்சனா மீது தனிப்பட்ட விரோதத்தை செயல்படுத்துகிறார்கள் என்று விசித்ரா சொல்ல அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“