விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விரைவில் தொடங்க உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்கும் பிரபலங்கள் குறித்த தகவல் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 7-வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக ப்ரமோக்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்தும் தகவல் வெளியாகி வருகிறது.
இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன், அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கப்படும் என்றும் இதற்காக பிரமாண்ட விழாவிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்தும் தகவல் வெளியாகி வருகிறது.
அதன்படி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில், நடிகை ரேகா நாயர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. வம்சம், ஆண்டாள் அழகர், பகல் நிலவு, பால கணபதி, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமான இவர், தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றியவர். வெளிப்படையாக பேசி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
சூப்பர் சிங்கர் புகழ் தொகுப்பாளர் பாவனா பாலகிருஷ்ணன் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளது. கிரிக்கெட் போட்டிகளை வர்ணனை செய்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பாவனா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கேட்டகிரியில் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது. அதேபோல் நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் புகழ் பெற்ற, நடிகை ரோஷினி ஹரிப்ரியன், பிரபல பாடகி ராஜலட்சுமி செந்தில் கணேஷ், பிரபல ஸ்டாண்ட்-அப் காமெடியன் கார்த்திக் குமார், நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா சங்கர், வி.ஜே.பவித்ரா, வழக்கு எண் 18/9, த்ரிஷா இல்லன்னா நயன்தாரா போன்ற படங்களில் நடித்த நடிகை மனிஷா யாதவ், நடிகரும் தொகுப்பாளருமான ம.கா.பா ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“