Biggboss Contestant Madhumitha Lifestyle Update : விஜய் டிவியின் பி்க்பாஸ நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பெரிய வரவேற்பை அளித்து வருவர் அனைவரும் அறிந்த ஒனறு நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கி இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளது. இந்த 4 சீசன்களிலும் ரசிகர்களுக்கு அதிகம் பிரபலமான போட்டியாளர்களே பங்கேற்று பிக்பாஸ பட்டத்தை பெற்றுள்ளனர். ஆனால் கடந்த அக்டோபர் 3-ந் தேதி தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் ஒரு சிலரை தவிர அனைவரும் புதுமுகங்களாக கலந்துகொண்டுள்ளனர்.
இதில் ராஜு, விஜய் டிவி-யின் பிரபல ஆங்கர் பிரியங்கா தேஷ்பாண்டே, ஐசரி வருண், இமான் அண்ணாச்சி, ஆகியோர் மட்டுமே ரசிகர்களுக்கு பிரபலமான முகங்களாக உள்ளனர். ஆனாலும் புதுமுகமான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து பல இளைஞர்களை தனது ரசிகர்களாக மாற்றிய பெருமை மதுமிதாவையே சாறும். ஜெர்மனியில் மாடலாகவும் பேஷன் டிசைனராகவும் இருந்த மதுமிதா ரகுநாதன் பிக்பாஸ் வீட்டில் ஃபர்பாமன்ஸில் பெரிதாக எதுவும் செய்யவில்லை என்றாலும் தனக்கென ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
ப்ரியங்கா மற்றும் நிரூப்பிடம் நெருங்கி பழகும் மதுமிதா, தான் தமிழில் பாடும்போது போட்டியாளர்கள் அனைவரும் கலாய்க்கிறார்கள் என் தெரிந்தும் கூட அதைப்பற்றி கவலைப்படாமல் தனது பணிகளை கவனித்து வருவே இவரிடம் அனைவருக்கு பிடித்தமான ஒன்றாகும். ஜெர்மனியில் பிறந்தது வளர்ந்த இவர், பேஷன் மீதுள்ள ஆர்வத்தினால் தபேஷன் டிசைன் படிப்பை தேடி படித்துள்ளார். அதன்பிறகு தனது சகோதரியுடன் ஆஸ்திரேலியா சென்ற இவர், ஒரு மிகப் பெரிய கம்பெனியில் டிசைனர் ஏஜென்சியாக வேலை செய்துள்ளார்.
ஆனால் விசா பிரச்சனை காரணமாக மீண்டும் ஜெர்மனி திரும்பிய அவர், ஐடி படிப்பை தொடந்துள்ளார். அப்போது ஒருவருடன் காதல் வயப்பட்ட இவர், அதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அதன்பிறகு அதில் இருந்து மீண்டு தனக்கு பிடித்த பேஷனில் கவனம் செலுத்திய அவர், பல நிறுவனங்களில் விளம்பர மாடலாக பணியாற்றியுள்ளார். டிவியை பார்த்தே தமிழ் பேச கற்றுக் கொண்ட மதுமிதா இன்று பிக் பாஸ் வீட்டில் முடிந்த வரை தமிழில் பேசி கமலிடம் பாராட்டும் பெற்றுள்ளார். இவர் தமிழ் பேசும் முயற்சி்க்காகவே தமிழகத்தில் ஏராமான ரசிகர்களை பெற்றுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil