2 தடுப்பூசியும் போட்டதால் இன்று உங்களுடன் இப்படி பேசிக் கொண்டிருக்கிறேன்: மருத்துவமனையில் இருந்து பேசிய கமல்

Tamil Bigboss Update : எனக்காக பிரார்த்தனை செய்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

KamalHassan Surprise Entry IN Biggboss Season 5 : சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு இருந்து வருகிறது. விஜய் டிவியில் ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த ஷோ இளைஞர்கள் மத்தியில் பெரும் பிரபலம். அனைத்து வசதிகளும் அடங்கிய ஒரு வீட்டில் எவ்வித தொடர்புகளும் இல்லாமல் போட்டியாளர்கள் 100 நாட்கள் தங்கி பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்களை வெற்றிகரமாக முடிக்க வேண்டும்.

இதற்கிடையே போட்டியாளர்களுக்குள் ஏற்படும் முட்டல் மோதல்களை பார்ப்பதற்கே ரசிகர்கள் பலரும் ஆர்வமாக இந்நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், இந்நிகழ்ச்சியின் 5-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 3-ந் தேதி தொடங்கியது.

வழக்கம்போல் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த இந்நிகழ்ச்சி தற்போது வெற்றிகரமாக 50 நாட்களை கடந்துள்ளது. இந்நிலையில், சமீபத்தில் அமெரிகக்காவில் இருந்து திரும்பிய நடிகர் கமல்ஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் தன்னை தானே தனிமைபடுத்திக்கொண்டார். இதனால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாத சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து, அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் தற்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் கமல்ஹாசன், ரம்யா கிருஷணன் முதல் எபிசோட்டில் களமிறங்கும் இன்றைய நிகழ்ச்சியில் மருத்துவமனையில் இருந்தபடி வீடியோ மூலம் பிக்பாஸ் போட்டியாளர்களுடன் பேசினார். அப்போது தனது உடல்நிலை குறித்து பகிர்ந்துகொண்ட அவர், கொரோனா ஒரு வதந்தி என்றும் பலரும் இன்றுவரை நம்பிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் மக்கள் பிரதிநி என்று மார்தட்டிக்கொள்ளும் எனகே கொரோனா தொற்று ஏற்பட்டது இந்த நோயின் தாக்குதல் குறித்து மக்களுக்கு எடுத்துச்சொல்லும் ஒரு வாய்ப்பாகவே பார்க்கிறேன்.

2 தடுப்பூசியும் போட்டதால் இன்று உங்களோடு பேசிக்கொண்டிருக்கிறேன் இதற்காக விஞ்ஞானத்திற்கும் மருத்துவத்திற்கும் நான் நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறேன் எனக்காக பிரார்த்தனை செய்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி என்று கூறியுள்ளார். அவரை ஸ்கிரீனில் பார்த்த போட்டியாளர்கள் அனைவரும் கெட் வெல் சூன் சார் என்று கூறி தங்களது பாசத்தை வெளிப்படுத்தினர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil reality show biggboss season 5 kamal hassan entry from hospital

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com