Bigg Boss Today Promo : பிக்பாஸ்... இந்த பெயரை கேட்டாலே சின்னத்திரை ரசிகர்கள் மட்டுமல்லாது பல தரப்பினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மற்ற ரியாலிட்டி ஷோவைப்போல் இல்லாமல் போட்டியாளர்களிடையே நடைபெறும் சண்டை, சச்சரவுகள், அவர்களுக்கு வழங்கப்படும் டாஸ்க், என ஒவ்வொரு நாளும் சுவாரஸ்த்தை உச்சமாக உள்ளது.
இந்தியாவில் முதலில் இந்தியில் தொடங்கப்பட்ட இந்த ஷோ கடந்த 2017-ம் ஆண்டு முதல் தமிழில் நடைபெற்று வருகிறது. முன்னணி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இதன் 5-வது சீசன் நேற்று தொடங்கியது. கடந்த 4 சீசன்களை போல் இல்லாமல் இந்த சீசனில் பல புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது இந்நிகழ்ச்சி குறித்து ப்ரமோ வெளியாகியுள்ளது. இதில் பிக்பாஸ் வீட்டின் தலைவராக இருக்க தகுதி உள்ள 5 பேர் முன்னே வருமாறு பிக்பாஸ் அழைக்கிறார். அதன்பிறகு முன்னே வரும் 5 பேரிடம் யார் யார் எந்த அணிக்கு கேப்டனாக இருக்கபோகிறீங்கள் என்று கேட்கிறார். அதற்கு பிரபல சீரியல் நடிகரும் உதவி இயக்குநருமாக ராஜூ ஜெயமோகன், தான் பாத்ரூம் க்ளீன் பண்ற டீம் கேப்டனாக இருக்க உள்ளதாக கூறுகிறார்.
இதை கேட்டு போட்டியாளர் ஒருவர் அதுதான் ரொம்ப ஈஸி என்று சொல்கிறார். அதன்பிறகு விஜே பிரியங்கா நாமெல்லாம் ஒன்னனோம் பாத்ரூம் கழுவி ப்ரண்டானோம் என்று சொல்ல அத்துடன் முடிகிறதுஇந்த ப்ரமோ. தற்போது இந்த ப்ரமோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில், நேற்று முதல்நாளில் நடைபெற்ற நிகழ்வு குறித்த வீடியோ பதிவு ஒன்றை ரசிகர் ஒருவர் இந்த ப்ராமோவின் கமெண்ட் பகுதியில் வெளியிட்டுள்ளார்.
இதில் விஜே பிரியங்காவின் முடி குறித்து ராஜூ ஜெயமோகன் கேட்கும்போது அவர், இதெல்லாம் அட்டாச்மெண்ட் கழட்டி போட்டன்னா... இதெல்லாம் ஒரிஜினல்னு நினைத்துவிட்டாயா என்று சொல்லி தனது முடி ஒவ்வொன்றாக கழ்ட்டி அவரது கையில் கொடுக்கிறார். இதை பார்த்து சக போட்டியாளர்கள் பலமாக சிரித்துக்கொண்டிருக்கின்றனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் பிரியங்காவின் முடி குறித்து ஆச்சரியமைடைந்து வருகினறனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil