Biggboss Promo Update : சின்னத்திரை ரசிகர்களுக்கு விறுவிறுப்பையும், மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கன்டன்ட் கொடுப்பதிலும் பிக்பாஸ்க்கு இணையாக எதுவும் இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் கடந்த 3-ந் தேதி (நேற்று முன்தினம்) தொடங்கப்பட்டது. வழக்கம்போல கடந்த 4 சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் 5-வது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார்.
Advertisment
இதில் முதல் நாளில் போட்டியாளர்கள் அறிமுகம் நடைபெற்றது. 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள இந்நிகழ்ச்சியில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவருமே புதுமுகங்களாகவும், ரசிகர்கள் மத்தியில் பிரபலமில்லாத போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதனால் இந்த நிகழ்ச்சி எப்படி செல்லும் என்று ரசிகர்கள் மத்தியில் தொடக்கத்திலேயே ஒருவித எதிர்பார்ப்பு தொற்றிக்கொண்டுள்ள நிலையில், முதல் நாளில் விஜே பிரியங்கா தனது தலைமுடி கழற்றிய நிகழ்வு பெரும் வைரலாக பரவியது.
தொடர்ந்து நேற்றைய நிகழ்வுகள் குறித்து ப்ரமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், இன்றைய எபிசோடு குறித்து ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள அனைவரும் தங்களை அறிமுகம் செய்துகொள்ளும் நிகழ்வு நடைபெறுகிறது. இதில் போட்டியாளர் இசைவாணி தனது அறிமுக நிகழ்வில், தனது வீட்டின் வறுமை மற்றும் கஷ்டங்களை கண்ணீருடன் கூறுகிறார். இதை பார்த்த சக போட்டியாளர்கள் கண்கலங்குகின்றனர்.
Advertisment
Advertisements
இந்த ப்ரமோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிகமான கஷ்டங்களை அனுபவித்தவர்கள் தான் யாரும் தொடமுடியாத உயரத்திற்கு செல்வார்கள் என்று கூறியுள்ளனர். மேலும் ஒரு சில ரசிகர்கள் சில விமர்சனங்களையும், ஒரு சிலர் தொடக்கத்தில் செண்டிமெண்ட் போக போக அதிரடி ஆக்ஷன் என்றும் கூறியுள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil