Tamil Biggboss Season 5 Update : சின்னத்திரையில் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்ச்சி பிக்பாஸ். விஜய் டிவியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், விரைவில் 5-வது சீசன் தொடங்க உள்ளது. இந்த சீசன் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இதில் ரசிகர்களை ஓரளவு திருப்திப்படுத்தும் வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் குறித்த ப்ரமோ வீடியோ கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இதில் கமல்ஹாசன் கல்யாண வீட்டில் கலகத்தை உண்டு செய்வதும் சமையல் கலைஞராக வருவது போன்று வெளியாக இந்த ப்ரமோகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஆனாலும் இந்த 2 ப்ரமோக்களிலும் நிகழ்ச்சி தொடங்கும் தேதி குறிப்பிடப்படாததால் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக பிக்பாஸ் 5-வது சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் யார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவி மிகப்பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி யை தொகுத்து வழங்கியவருமான பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனாலும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், தற்போது அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதை உறுதி செய்யும் வகையில் விஜய் டிவி தகவல் வெளியிட்டுள்ளது.
பிரியங்கா தொகுத்து வழங்கி சூப்பர் ஹிட்டான ஸ்டார் மியூசிக் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது தொடங்கியுள்ள நிலையில், இந்நிகழ்ச்சியில் பிரியங்காவிற்கு பதிலாக மாகாபா தொகுத்து வழங்கியுள்ளார். அந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக பாரதிகண்ணம்மா சீரியல் கலந்து கொள்ள உள்ளதாக தெரியவந்துள்ளது.
இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் அப்போ கண்டிப்பா பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கண்டிப்பா கலந்து கொள்வார் என்று கூறி வருகின்றார்கள். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil